Sep 30, 2011

நலம் விரும்பி

நெஞ்சுலகில் உலவுகின்ற
நினைவு நிலாவே!
வஞ்சமிலாச் செஞ்சொல்லில்
வாஞ்சைமிக உள்ளவன் நான்
இனிய உளவாகும்
ஏசிடினும் நீஎன்னை
புற்றனம் என்றென்னைப்
புண்படுத்தும் உன்சொல்லும்
பண்படுத்தப் பயனாகும்
நீதானே நலம்விரும்பி!

0 comments:

Post a Comment