Apr 15, 2015

செய்யுள் செய்யுள்

கலிவிருத்தம்

ஆமத மோவிது தாமத மோபின்
யாமத மேறின னேமெனை துறந்து
தேமது ரத்தமிழ்ச் செய்யுள் செய்யுள்
பூமது ரந்தான் புணர்வண் டானேன்
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்...

--------------------
ஆமதமோ - அதமோ ஆம்? - அழிவுநிலை ஆகுமோ?
தாமதமோ? - கால நீட்டம் ஆகுமோ?
பின் - பின்னர்
யாமதமேறினன்? - யா மதம் ஏறினன் - என்ன செருக்கு உடையவனானேன்?
ஏமெனை - ஏம் எனை(என்னை என்பதன் இடைக்குறை) - மனக்குழப்பம் எதனால்?
இத்தகைய எல்லாச் சிந்தனைகளையும் துறந்து
தேமதுரத் தமிழ்ச் செய்யுள் செய்யுள் - தேமதுரத் தமிழ்ச் செய்யுள் என்னுள்ளத்தில் செய்யும் செயலால்
பூமதுரம் தான் புணர்வண்டு ஆனேன் - பூவின் தேனை உண்ண அதனுள் சேர்ந்த வண்டானேன்.