May 12, 2015

என்னவளே

கலிவிருத்தங்கள்

என்னெஞ் சுடைய எடுத்தோ திடுவன்
என்றஞ் சித்தான் ஏதும் எழுதிலன்
என்னெஞ் சறிவ தென்னென் றறிய
எனக்கே ஆவல் ஆதலின் இதுவாம்                                 1

என்னெஞ் சுடைய என்னென் றறிந்தனை
என்னவ ளேநீ  ஏனோ யாஅன்
என்னை ஏஎன் எனவே வினவி
என்னைத் தள்ளி வைத்தனை நன்றோ?                         2

யான்செய் குற்றம் என்னெனின் உன்னை 
யானெனப் பாரா தேமாற் றியதே
யானெனப் பார்த்தே ஏமாற் றினனே
யான்கொள் சிந்தை உரைக்கா தங்ஙனம்                      3

உன்றன் மொழிக்குக் காதளித் தேனே
உன்றன் மொழியைக் காதலித் தேனே
உன்றன் மொழிகா வெனச்செழித் தேனே
உன்றன் மொழிகா வெனத்தவித் தேனே                    4

யாஅன் இன்னும் அறிந்திலன் அன்பே! 
யாதுற் றனைநீ என்னால் என்பால்
யாதும் நீயுற விலையென இன்னும்
யாதும் உரைக்கா திருப்பத னாலே                                    5
                    - தமிழகழ்வன்

3 comments:

உமா said...

முதலில்
உன் சொற்களுக்குக் காதளித்தவன் நான்
பிறகு
உன் சொற்களைக் காதலித்தவன் நான்
பிறகு
உன் சொற்களால் கா எனச் செழித்தவன் நான்
பிறகு
உன் சொற்களே கா எனத் தவித்தவன் நான்

அழகு. வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

சுப்பிரமணி சேகர் said...

நன்றி

Post a Comment