Oct 12, 2018

பைந்தமிழ்ச் சோலை

நற்றமிழ்ப்பா சுமந்துவரும் நல்லுள்ளத் தென்றலிடம்
“பொற்றமிழில் பாட்டிசைக்கும் புலவன்யார்?” எனக்கேட்டேன் 
“அற்றமிலாப் பைந்தமிழின் சோலையென ஒன்றுண்டு
சிற்றுளியாய் வந்தாரும் சிறப்பாகப் பாவடிக்கக் 
கற்பிக்கும் பெருஞ்செயலில் கனிவுதனைக் கனியாக்கி
நற்றுணையாய் நிற்கின்ற நல்லதமிழ்ச் சோலையிலே
கற்றுவரும் கனியாகக் கவிஞர்கள்  பலருண்டு
முற்றுமுணர்ந் தாயாநீ  முகிழ்ப்பதெலாம் எங்கிருந்து?”
                                                           - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர் 

No comments:

Post a Comment