கலை:
பெருங்கோபி கையர்தம் பேரன்புக் குரியவனாய்
வருங்கோபி நாதன்பேர் வடிவாக வாய்த்தவரே!
பொருங்கோபி ணைத்திருக்கும் பொறிவில்லின் நாணாக
ஒருங்கோவி யத்தழகாய் உயர்வோடு மனங்கொள்வீர்!
கோபி:
கலைவானில் அழகாகக் கலைந்தோடும் முகிலூடே
கலைகலையாய் நடக்கின்ற கலைகற்ற நிலவாகக்
கலையாத கனவோடு காலமெலாம் சேர்ந்திருப்போம்
கலைவாணி கவினாலே கலையாலே கனிவாலே!