Mar 18, 2015

உன்னையே உன்னியே

கலிவிருத்தம்

உன்னையே உன்னியே உன்னிலே உளனென
என்னையே எண்ணெயாய் ஏற்றிய தீபமாய்
உன்னினை வேயொளி ருள்ளமே இல்லமே
என்னையான் என்னதான் செய்குவன்? உய்குவன்?
     

                 - தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்.

Mar 6, 2015

கார்த்திகேயன் - வெளியீட்டு மேலாண்மை (பிறந்தநாள் வாழ்த்து)

நிலைமண்டில ஆசிரியப்பா

மதலை மலர்தலை மகிழ்ந்தெதிர் கொளுதலை
நுதலை முகர்தலை நுதலினின் றெழுதலை
பெறலை பெயரலை பெருமை தருதலை
உறலை நிறைதலை உயர்மதி உணர்தலை
அதிலை அலைதலை பெருந்தன்மை தெரிதலை
எதிலை ஓர்தலை அதிலே நிற்றலை
இவைதலை பெறுதலை வாழிய பெருந்தலை
                       - தமிழகழ்வன்

உளனா? இலனா?

நிலைமண்டில ஆசிரியப்பா

என்னினைத் தனையோ? எனையழைத் தாயென்?
என்னுளம் அறியவோ? உன்னுளம் உரைக்கவோ?
உனையறி குவனோ? உணரா தவனோ?
உனையறி குவனென உணராத் தவனோ?
எனக்கென் றெழுதி யிருப்பின் யாவன்
எனக்கில் லையெனத் தடுக்க வல்லோன்?
எனக்கா யெழுதி யிராத தாயின்
தனக்கில் லையெனத் தனிநின் றொழுகுவன்
சொல்லவி ழைந்தேன் சொல்லவி ழைந்தன
சொல்லவி ழவிலை சொலநா வெழவிலை
சொல்லேன் உண்மை சொல்லொ ணாத
அல்லல் தரூஉம் ஆதலின் அன்பே!
                           - தமிழகழ்வன்