கைகளை நம்பிக் களங்காண்க பொய்களைப்
போக்கி நிலைக்கும் வழிக்கு 1
செய்கை சிறந்தன வாகுக பொய்வழிப்
புல்லர்ப் புலமோடச் செய்து 2
மெய்வழியோர் மேன்மை பெருகட்டும் உய்வழி
ஓர்ந்து நலஞ்செய்க வே 3
தீமை யெனத்தெரிந்தும் தேர்ந்திழைப்பார் வாய்மை
வழிதேடா மூடர் பிறர்க்கு 4
மதியிலார் மானம் விழையார் விதியென்பார்
வீண்பேச்சு வீரரா வார் 5