Jul 31, 2011

காற்றினிலே... பூங்காற்றினிலே...

காற்றினிலே
பூங்காற்றினிலே
வரும் பாட்டினிலே
செவி பெறுந்தேன் ஊற்றினிலே
மனம் மயங்குதற்போல்
தான் இயங்குதற்போல்

நினைவினிலே
நீ நேர்கையிலே
புவி அனைத்தினையும்
நான் மறக்கின்றேன்
உயிர் துறக்கின்றேன்
மறு பிறக்கின்றேன்

நேரினிலே
நீ நேர்கையிலே
ஒரு வார்த்தையுமே
என் வாயினின்று
வெளி வாராமல்
மனம் சோராமல்
ஆவல் தீராமல்

உறைகின்றேன்
இதை அறைகின்றேன்
நீ பிறையன்றோ...!
மனச்சிறையன்றோ
நல்சுரமன்றோ
வலக்கரமன்றோ
பெருவரமன்றோ...!

மொழி பகர்வாயோ...?
நுதல் பகிர்வாயோ...?
மனம் புகுவேனோ...?
மணம் புரிவேனோ...?

0 comments:

Post a Comment