நிலைமண்டில ஆசிரியப்பா
சிறுகல் எடுத்துச் சிறுவர் இருவர்
உறுமுட் புதரில் ஓணானைப் பார்த்து
வீசினர் அதுபுதர் உள்ளே காய்ந்த
மாசில் குண்டு மணிக்கொடி மீதே
படவே மணிகள் 'படபட' வென்றே
விடவே சிறுவர் அதனை எடுத்துப்
"பிள்ளை யார்க்குப் பிழைதனைச் செய்த
கள்ளஓ ணானைக் கண்டே அடித்தோம்
கண்டாயா பிள்ளை யாரவர் தம்முடைக்
கண்களை நமக்குப் பரிசாய்த் தந்தார்"
என்றே எண்ணி இன்பங்கொண் டனரே!
- தமிழகழ்வன்.
சிறுகல் எடுத்துச் சிறுவர் இருவர்
உறுமுட் புதரில் ஓணானைப் பார்த்து
வீசினர் அதுபுதர் உள்ளே காய்ந்த
மாசில் குண்டு மணிக்கொடி மீதே
படவே மணிகள் 'படபட' வென்றே
விடவே சிறுவர் அதனை எடுத்துப்
"பிள்ளை யார்க்குப் பிழைதனைச் செய்த
கள்ளஓ ணானைக் கண்டே அடித்தோம்
கண்டாயா பிள்ளை யாரவர் தம்முடைக்
கண்களை நமக்குப் பரிசாய்த் தந்தார்"
என்றே எண்ணி இன்பங்கொண் டனரே!
- தமிழகழ்வன்.
2 comments:
குன்று மணியைச் சொல்றீங்களோ?
குன்றுமணிதான். பேச்சு வழக்கில் குண்டுமணியாகிவிட்டது என நினைக்கிறேன்.
Post a Comment