எனக்கு எக்கு(eggu) என்றும் ஒரு பெயர் உண்டு. சிறுவயதிலிருந்தே எக்கு என்றே என்னைப் பலரும் அறிவர்.
நான் கல்லூரியில் படிக்கும்போது, 2008-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஒருநாள், சென்னையிலுள்ள மருத்துவமனைகளைத் தூய்மைப்படுத்தும் பணிக்காக, மாணவர்கள் அனைவரையும் தொண்டூழியராக (volunteers), பல்வேறு மருத்துவ மனைகளுக்கு அழைத்துச் சென்றார்கள். எங்கள் பேருந்து, எழும்பூரிலிருந்த குழந்தைகள் நல மருத்துவமனைக்குச் சென்றது. அங்கு சென்று, துப்புரவு வேலைகள் செய்துகொண்டிருந்தோம். திடீரென்று ஞானோதயம் போல, எனக்கு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. 'ஆஹா! இந்த மருத்துவமனைதான் என்னைக் காப்பாற்றியதா?' நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை!!! பெருமகிழ்ச்சியில் இன்னும் ஊக்கமாக வேலை செய்து கொண்டிருந்தேன்.
பழைய நினைவுகளைக் கிளறிப் பார்த்தேன்.
----------------
ஆண்டு 1987. பச்சிளங் குழந்தையாக இருந்த எனக்கு, ஒரு விதமான நோய். பால் குடித்தால் ஜீரணம் ஆகாது. வயிறு புடைத்து, வலிக்க ஆரம்பித்து விடும். மீண்டும் வாந்தி எடுத்தால்தான் சரியாகும். பாவம் நான். என் பெற்றோரின் தவிப்பை என்ன சொல்ல? அருகிலிருந்த அரசு மருத்துவமனைக்கு என்னைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள். "இங்கு முடியாது. சென்னை egmore - ல் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுங்கள்", என்று கூறி விட்டர்கள். சென்னைக்குச் சென்று, எப்படியெல்லாமோ கஷ்டப் பட்டு, என்னைக் காப்பாற்றினார்கள். egmore மருத்துவமனைக்குச் சென்று உயிர் பிழைத்து வந்ததால், எல்லாரும் செல்லமாக egmore என்றே கொஞ்ச ஆரம்பித்து விட்டார்கள். அது பின்னர், eggu என்றாகிவிட்டது.
--------------------
No comments:
Post a Comment