நதிக்கு நண்பன் நாணல்தான்
'நலமா?' நாளும் கேட்டிடுமே! 1
நாணலின் நண்பன் நதிதானே
வாழ்வினில் வளமே சேர்த்திடுமே! 2
தட்டிக் கொடுப்பவன் நண்பனே!
தட்டிக் கேட்பதும் நண்பனே! 3
இன்பம் துன்பம் ஏதெனினும்
உடனுறை பவனே நன்னண்பன் 4
நினைந்தால் போதும் நெஞ்சார
நினைவிலும் நன்மை செய்திடுவான் 5
நேசம் உள்ள நண்பனே!
நெஞ்சம் உன்னை மறக்குமா? 6
பாசப் பிணைப்புப் பந்தமே!
பண்பில் ஓங்கிய சொந்தமே! 7
நாளும் உன்னை நினைக்கையில்
நெஞ்சில் இன்பம் தங்குதே! 8
கொட்டும் நீர்த்துளி கண்ணிலே
நண்பா பிரியும் போதிலே 9
நிலையி னின்று பிரிந்தாலும்
நினைவுகள் என்றும் மறவாதே! 10
- சுப்பிரமணிய தமிழகழ்வன்
'நலமா?' நாளும் கேட்டிடுமே! 1
நாணலின் நண்பன் நதிதானே
வாழ்வினில் வளமே சேர்த்திடுமே! 2
தட்டிக் கொடுப்பவன் நண்பனே!
தட்டிக் கேட்பதும் நண்பனே! 3
இன்பம் துன்பம் ஏதெனினும்
உடனுறை பவனே நன்னண்பன் 4
நினைந்தால் போதும் நெஞ்சார
நினைவிலும் நன்மை செய்திடுவான் 5
நேசம் உள்ள நண்பனே!
நெஞ்சம் உன்னை மறக்குமா? 6
பாசப் பிணைப்புப் பந்தமே!
பண்பில் ஓங்கிய சொந்தமே! 7
நாளும் உன்னை நினைக்கையில்
நெஞ்சில் இன்பம் தங்குதே! 8
கொட்டும் நீர்த்துளி கண்ணிலே
நண்பா பிரியும் போதிலே 9
நிலையி னின்று பிரிந்தாலும்
நினைவுகள் என்றும் மறவாதே! 10
- சுப்பிரமணிய தமிழகழ்வன்
No comments:
Post a Comment