“மைக்ரோ டெவில்! (Micro Devil...!) - குட்டிச் சாத்தான்”, என்று சொன்னதும் சிரித்து விட்டான் துரை.
“என்னடா இது?”
“அன்று அந்தப் புலம்பு புலம்பினாய், தேர்ச்சி பெறுவேனான்னு. உன்னைச் சமாதானப் படுத்தவே எங்களுக்குப் போதும் போதும்’னு ஆகிடுச்சு. அவ்வளவு தொல்லை பண்ணிட்டு, இன்னிக்கு விஸ்வரூபம் எடுத்திருக்கியே, அதனாலதான்” என்றான் ஸ்னோவின்.
‘யார் யாரோ என்னென்னமோ எல்லாம் சாதித்துவிட்டு எத்தனையோ பெரிய பட்டமெல்லாம் பெறுகிறார்கள். எனக்கும்கூட இப்படியெல்லாம் பட்டப்பெயர் வைக்க ஆட்கள் இருக்கிறார்களே’ என்று எண்ணி நெகிழ்ந்து போனான் துரை.
துரை இப்போதெல்லாம் யாரிடமும் கோபித்துக் கொள்வதில்லை. இரவீந்தர் முன்பைவிட மிகவும் பிடித்துப் போன நண்பனாகிவிட்டான். அவனிடம் முன்பு தான் கோபித்துக் கொண்டதை எண்ணி அவ்வப்போது வருத்தப்படுவான். இனிமேல் யாரிடமும் கோபித்துக் கொள்ளக்கூடாது என்று தனக்குள் ஓர் உறுதிகொண்டான். இப்போது யார் எவ்வளவு கேலி செய்தாலும், துன்பப்படுத்தினாலும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவம் வந்துவிட்டது.
"டேய்! வாங்கடா சாப்பிடப் போலாம். Time ஆயிடுச்சு"
எல்லாரும் சென்றார்கள்.
சே! செம talent ra."
"யார டா சொல்ற?"
சச்சின தான்டா."
"ஆமாம் டா, அவர் 16 வயசுலயே கிரிக்கெட்டுக்கு வந்த மார்க்கண்டேயன்"
"செம கலக்கு கலக்குறார் டா, இந்த God of Cricket"
"தென் ஆப்பிரிக்கா கூட ஆடுறது னா, திருநெல்வேலி அல்வா சாப்படறது மாதிரி னு போட்டிருந்தாங்க பாத்தியா பேப்பர்ல"
". . ."
ஸ்னோவினும் கார்த்தியும் பேசிக்கொண்டே வந்தார்கள்.
சிவ பூஜையில் கரடி புகுந்தது.
"ஸ்னோவின், எனக்கு ஒரு புதுப்பெயர் வைத்திருக்கிறேன். ‘வெண்பாரதன்’. எப்படி இருக்கிறது?”
“நல்லாதான் இருக்கு, நீயும் உன் தமிழும், திருந்தவே மாட்டியா?” என்றான் ஸ்னோவின்.
“சரி, இப்ப இந்தப் பெயர் வச்சிக்கிட்டு என்ன பண்ணப் போற?”, கேட்டான் கார்த்தி.
“இனிக் கவிதைகளை இந்தப் பெயரிலேயே எழுதப் போகிறேன். முதலில் இந்தப்பெயரில் ஒரு மின்னஞ்சல் உருவாக்கப் போகிறேன்” என்றான் துரை.
ஸ்னோவினுக்கு உள்ளுக்குள் ஒரு திருப்தி ஏற்பட்டது. ‘பரவாயில்லை. இவன் பிழைத்துக்கொள்வான். கணினி ஆதிக்கக் காலத்தில், கணினித்தமிழ் வளர்ச்சிக்கு இவனும் ஒரு காரணம் ஆவான்’
வெண்பாரதன் இப்போது ஒரு குறள்வெண்பா எழுதினான்.
‘அமிழ்தினும் ஆற்ற இனிதே;தான் பெற்ற
தமிழும்நண் பர்களும் தான்’
(கதை முடிவுறும். தமிழ்ச்சிந்தனை தொடரும்)

No comments:
Post a Comment