எழுத்தை மாற்றிய எளிய நெஞ்சினர் - தலை
காக்கும் என்ப தறிந்து - கல்வியே
காக்கும் என்ப தறிந்து - மூடிய
பள்ளிக் கூடம் திறந்து - மதிய
உணவும் ஈந்து புரந்து (எழுத்தை)
வளங்கள் பலவும் பெருக்கி - தொழில்
வளங்கள் பலவும் பெருக்கி - எழில்
அணைகள் அமைத்துப் பெருக்கி - நீர்
அணைகள் அமைத்துப் பெருக்கி - பசுமை
கொஞ்சும் தமிழ்நா டென்று - வறுமைக்
கொடுமை அகற்றி வென்று (எழுத்தை)
இரண்டா யிரங்கள் ஆண்டு - இங்கு
ஏற்ப டாத மாற்றம் - குறு
ஒன்ப தாண்டே ஆண்டு - உரு
வாக்கித் தமிழ கத்தின் (எழுத்தை)
திட்டம் ஒன்றும் வகுத்து - முதல்வர்
பதவி தன்னை விடுத்து - இளையோர்
ஆள வேண்டும் என்று - பேர்
ஆலோ சனைகள் செய்து (எழுத்தை)
அரசர் இவர்தாம் என்று - ஆளும்
அரசர் இவர்தாம் என்று - இந்த
அகிலம் உணரக் கூறி - வழி
நடத்தி இந்தி யாவின் (எழுத்தை)
வியக்கும் செயல்கள் செய்தார் - நன்மை
பயக்கும் செயல்கள் செய்தார் - மதி
நுட்ப வாதி யவர்தான் - மக்கள்
மனதை மட்டும் படித்தார் (எழுத்தை)
ராசர்க் கெல்லாம் ராசர் - திறமை
மிகுந்த காம ராசர் - எளிய
வாழ்வே கொண்ட ராசர் - அன்பு
செலுத்தும் உயர்ந்த நேசர்
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
எழுத்தை மாற்றிய எளிய நெஞ்சினர் - நாட்டின் தலை
எழுத்தை மாற்றிய எளிய நெஞ்சினர்காக்கும் என்ப தறிந்து - கல்வியே
பள்ளிக் கூடம் திறந்து - மதிய
உணவும் ஈந்து புரந்து (எழுத்தை)
வளங்கள் பலவும் பெருக்கி - எழில்
அணைகள் அமைத்துப் பெருக்கி - நீர்
அணைகள் அமைத்துப் பெருக்கி - பசுமை
கொஞ்சும் தமிழ்நா டென்று - வறுமைக்
கொடுமை அகற்றி வென்று (எழுத்தை)
ஏற்ப டாத மாற்றம் - குறு
ஒன்ப தாண்டே ஆண்டு - உரு
வாக்கித் தமிழ கத்தின் (எழுத்தை)
பதவி தன்னை விடுத்து - இளையோர்
ஆள வேண்டும் என்று - பேர்
ஆலோ சனைகள் செய்து (எழுத்தை)
அரசர் இவர்தாம் என்று - ஆளும்
அரசர் இவர்தாம் என்று - இந்த
அகிலம் உணரக் கூறி - வழி
நடத்தி இந்தி யாவின் (எழுத்தை)
பயக்கும் செயல்கள் செய்தார் - மதி
நுட்ப வாதி யவர்தான் - மக்கள்
மனதை மட்டும் படித்தார் (எழுத்தை)
ராசர்க் கெல்லாம் ராசர் - திறமை
மிகுந்த காம ராசர் - எளிய
வாழ்வே கொண்ட ராசர் - அன்பு
செலுத்தும் உயர்ந்த நேசர்
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment