நேரிசை வெண்பா
காவருங்கா லுள்ளத்தைக் கல்லாய்
அடைத்துப்பின்
ஏவல்லி ஏங்காதே இன்னாதே - மாவண்டேன்
மாவண்டேன் றேடி மலையாதும் காணாது
நோவது நீயறி வாய்
- தமிழகழ்வன் சுப்பிரமணி
ஏ வல்லி! கா வருங்கால் உள்ளத்தைக் கல்லாய் அடைத்துப் பின் ஏங்காதே இன்னாதே
மா வண்டு மா வண் தேன் மலை யாதும் தேடிக் காணாது நோவது ஏன்? நீ அறிவாய் - தமிழகழ்வன் சுப்பிரமணி
No comments:
Post a Comment