தரவு கொச்சகக் கலிப்பாக்கள்
நெடுநாள்கள் கடந்துதொடங் கும்பாடல் இதன்வழியென்?
துயரெல்லை யோ?வினிமை யோ?வென்ன? யானறியேன்
யாரென்றன் மனமமைதி பெறவுரைப்பார்? இச்செய்தி
அவள்செவிக்கெட் டிடநானு ரைத்தக்கால் அந்தோ? 1
'பழம்பொருணீ பாரீசைப் பார்க்கச்சென் றிடத்தாஅன்
அழைத்ததியார்? அறியாய்நீ யுலகினிலே யாதொன்றும்'
களிப்புடனே கலாய்த்துரைத்தாய் அதுதானுண் மையெனினும்
ஏனுள்ளே னிங்ஙனம்யான் எவ்வாஅ றுரைப்பேனோ? 2
என்சொல்ல வாயெடுத்தும் என்னெண்ணம் அதைச்சொல்ல
யாருணர்வார் ஆனாலும் அவர்தம்சொல் லஃதொன்றில்
உறுதியுடன் உள்ளாற உளமுரைப்பார் வளமுரைப்பார்
மாற்றமெலாம் காற்றலையாய் அதிவிரைவில் வந்திடுமோ? 3
ஒருதுருவத் துள்ளத்தை மருதுருவ மாய்க்காட்டி
ஒருநொடியில் யார்மாற்ற முடியுமிவண் உரைப்பீரே?
படிப்படியாய்ப் படிபெறவே முடியுமுண்மை வேறென்ன
கடிதிலுளம் கவின்பெறுமா? கடிதேஎ சொல்வீரே 4
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:
Post a Comment