கலிவிருத்தங்கள்
என்னெஞ் சுடைய எடுத்தோ திடுவன்
என்றஞ் சித்தான் ஏதும் எழுதிலன்
என்னெஞ் சறிவ தென்னென் றறிய
எனக்கே ஆவல் ஆதலின் இதுவாம் 1
என்னெஞ் சுடைய என்னென் றறிந்தனை
என்னவ ளேநீ ஏனோ யாஅன்
என்னை ஏஎன் எனவே வினவி
என்னைத் தள்ளி வைத்தனை நன்றோ? 2
யான்செய் குற்றம் என்னெனின் உன்னை
யானெனப் பாரா தேமாற் றியதே
யானெனப் பார்த்தே ஏமாற் றினனே
யான்கொள் சிந்தை உரைக்கா தங்ஙனம் 3
உன்றன் மொழிக்குக் காதளித் தேனே
உன்றன் மொழியைக் காதலித் தேனே
உன்றன் மொழிகா வெனச்செழித் தேனே
உன்றன் மொழிகா வெனத்தவித் தேனே 4
யாஅன் இன்னும் அறிந்திலன் அன்பே!
யாதுற் றனைநீ என்னால் என்பால்
யாதும் நீயுற விலையென இன்னும்
யாதும் உரைக்கா திருப்பத னாலே 5
- தமிழகழ்வன்
என்னெஞ் சுடைய எடுத்தோ திடுவன்
என்றஞ் சித்தான் ஏதும் எழுதிலன்
என்னெஞ் சறிவ தென்னென் றறிய
எனக்கே ஆவல் ஆதலின் இதுவாம் 1
என்னெஞ் சுடைய என்னென் றறிந்தனை
என்னவ ளேநீ ஏனோ யாஅன்
என்னை ஏஎன் எனவே வினவி
என்னைத் தள்ளி வைத்தனை நன்றோ? 2
யான்செய் குற்றம் என்னெனின் உன்னை
யானெனப் பாரா தேமாற் றியதே
யானெனப் பார்த்தே ஏமாற் றினனே
யான்கொள் சிந்தை உரைக்கா தங்ஙனம் 3
உன்றன் மொழிக்குக் காதளித் தேனே
உன்றன் மொழியைக் காதலித் தேனே
உன்றன் மொழிகா வெனச்செழித் தேனே
உன்றன் மொழிகா வெனத்தவித் தேனே 4
யாஅன் இன்னும் அறிந்திலன் அன்பே!
யாதுற் றனைநீ என்னால் என்பால்
யாதும் நீயுற விலையென இன்னும்
யாதும் உரைக்கா திருப்பத னாலே 5
- தமிழகழ்வன்
3 comments:
முதலில்
உன் சொற்களுக்குக் காதளித்தவன் நான்
பிறகு
உன் சொற்களைக் காதலித்தவன் நான்
பிறகு
உன் சொற்களால் கா எனச் செழித்தவன் நான்
பிறகு
உன் சொற்களே கா எனத் தவித்தவன் நான்
அழகு. வாழ்த்துக்கள்
அருமை...
நன்றி
Post a Comment