கலிவிருத்தம்
வாச மந்தா தித்திருப் பாற்கடல்
ஆச னந்தா னென்னர வாமுயர்
நேச மந்தா சின்மலர் இலக்குமி
மாச னந்தம் போக்கிடும் இராகவன் 1
வீசு தென்றற் போல்விளங் கிடவருள்
ஆசி பெற்று வாழிய வளத்தொடு!
ஆசு கர்வ மேதுமி லாதவன்
நேசன் நேர்நில் நெஞ்சுரன் வாழிய! 2
நேச முற்றன நேர்ந்திட வாழிய!
மீசை மாகவி போற்றுவன் வாழிய!
பேசி டாவுயிர் பாசமுற் றியவன்
ஈசன் மைந்தனின் பங்கொள வாழிய! 3
தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
1 comment:
அருமை
Post a Comment