சந்தக் கலிவிருத்தம்
அன்பின்விழி ஆன்றோர்மொழி ஐயன்வழி ஔகத்(து)
இன்பங்கொள ஈதல்வசி என்னும்படி ஏற்றம்உன்னுங்கவி ஊக்கங்கொள ஒன்றித்தரும் ஓசை
தன்னில்சகி மன்னன்வழி நண்ணுங்கனி ஞான்று
அப்பிருமணி அகிலத்தினில் அரியனபெரும் யாவும்
ஒப்பிலிமணி என்றேநிலும் ஒண்ணித்தில நகையாள்
செப்பிடுமணி ஆனந்தியின் எண்ணங்கொளும் உள்ளம்
சுப்பிரமணி உறுகென்றுயர் உள்ளத்தொடு வாழ்த்தும்
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment