நிலைமண்டில ஆசிரியப்பா
கொண்டு கொடுவாம் இடைக்குறை மதிக்க
கொண்டு கொடுவாம் இடைக்குறை மதிக்க
மண்டலமா மண்தலமா மட்டல மாவது?
கொண்டன திகட்டலில் கொண்டுவா வென்றே
உண்டுயிர்க் கின்ற இன்பொருள் தமிழே!
அண்டத் தளவிலை அண்டு மளவுளன்
தொண்டிருந் துள்ளன கொண்டில னெனினும்
தொண்டுசெய் துள்ள மகிழ்வேனே!
பண்டிருந் தோங்குஞ் செந்தமிழ்த் தேனே!
- தமிழகழ்வன்
தொண்டிருந் துள்ளன கொண்டில னெனினும்
தொண்டுசெய் துள்ள மகிழ்வேனே!
பண்டிருந் தோங்குஞ் செந்தமிழ்த் தேனே!
- தமிழகழ்வன்
2 comments:
பாதி புரிந்தது பாதி புரியவில்லை ..ஆனாலும் வாசிக்க மிகவும் நன்றாக இருந்தது
நன்றி!
கொண்டு கொடு ஆகும் - இடைக்குறை.
தொண்டு மாறு ஒன்பது - தொண்டு என்பது ஒன்பது ஆகியது.
தொண்பது தொண்ணூறு, தொண்ணூறு தொள்ளாயிரம், தொண்டும் ஆயிரமும் சேர்ந்த தொண்டாயிரம் ஒன்பதாயிரம்.
இதை இப்போது எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்றால் விளங்கவில்லை. இதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளலாமா என்பதும் விளங்கவில்லை. ஒரு பொருட்டாய் எடுத்துக்கொள்ளாமல் விடவும் முடியவில்லல. தமிழ் அப்படிப்பட்டது. ஏனென்றால் 'கொண்டல்' என்றால் 'கொள்ளலா'? கொள்ளாதிருத்தலா? (கொண்டல் - கொண்டு அல்). இருபொருளும் உண்டல்லவா?
மட்டலம், மண்டலம், மண்தலம் - மூன்றினுக்கும் ஒரே பொருள் கொள்ளமுடியும் அல்லவா? கொண்டவை திகட்டிடாமல் இன்னும் வேண்டும் என்னும் இனிய பொருள், குளிர்ந்த அமிழ்தம் தோய்ந்த கடவுள்! அது தமிழ்தே - தமிழ்க்கடவுள்.
அண்டம் அளவுக்கு அறியேன் என்றாலும் தமிழிடம் அண்டும் அளவுக்காவது அறிந்துள்ளேன் எனப் பெருமை கொள்வேன். தமிழ்ப்பழமையும் பழமையின் பெருமையும் தெரியாதவன் எனினும் சிறுபணியாற்றி உள்ளம் மகிழ்வேன்.
Post a Comment