எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
பொருவிளங்கு முருண்டையது மொழிவ ழக்கில்
பொருவிளங்கா வுருண்டையென மாற்றங் கொண்டு
பொருள்மயக்கம் தந்தென்னை யலைக்க ழிக்கப்
பொருளுணர்த்தி யருள்தந்தார் பெருந்த கைமைத்
திருவரதப் பெருங்கோவும் அழகுக் கோவும்
சிறந்தபொருள் சொல்வழக்கைத் தெரிந்து கொள்வோம்
பொருள்விளங்கா மற்போதல் புரிந்து கொள்ளாப்
பொருள்நிலையாப் பொருளென்று பொருள்த ரும்மே
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
மொழிவழக்கு - வினைத்தொகையாகப் பேச்சு வழக்கு எனும் பொருளில்.
திருவரதப் பெருங்கோ - மரபுமாமணி மா.வரதராசனார்
அழகுக் கோ - சுந்தரராசனார்
பொருள்விளங்காமற் போதல் என்பது 1. புரிந்துகொள்ளாப் பொருள்,
2. நிலையாப் பொருள் எனும் இருபொருள்களைத் தரும்.

1 comment:
ஆஹா, அற்புதமான பொருள் பொதிந்த பொருள் விளங்கும் கவிதை. மு.வ. பெயரைக் கேட்கவே இனிக்கிறதே.
Post a Comment