அணிமே கலையாம் மணிமே கலையே
துணிவே துணையாய்த் துலங்குக உலகே!
உன்னைத் துரத்தும் ஓங்கு துயரெலாம்
உன்னைத் துறந்தும்என்(று) ஓடி ஒழியட்டும்
கண்ணை மூடிக் கவன்ற போதெலாம்
விண்ணை முட்டி வெடிமழை பொழியட்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் தங்காய்!
நனிமகிழ் வோடு நானிலம் வாழ்கவே!
No comments:
Post a Comment