Jun 28, 2024

இன்பொருள் மென்பொருள்

மின்பொருள் கண்டார் வியனறி வியலார்
மின்னணு வியலாம் நுண்பொருள் கண்டார்
கண்ணெனும் எண்ணும் எழுத்தும் கருதி
மின்னும் திரையில் இன்பொருள் கண்டார்
என்பொருள் என்னின் மென்பொரு ளாமே
வன்பொருள் எல்லாம் மென்பொரு ளாக்கும்
அறிவின் ஊற்றாய் அதுவளர்ந் தோங்கி
நுண்ணறி வினையும் செயற்கை செய்தார்
வையத் தளவில் வாணிக மெல்லாம்
செய்யக் கொடுத்தார் செயற்பொறி யாளர்
மென்பொரு ளின்றியிவ் வுலகில்
என்பொருள் இயங்கும் என்னும் நிலையே!
                        - தமிழகழ்வன் சுப்பிரமணி 

No comments:

Post a Comment