Sep 21, 2024

இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் - காளிதாசு

அரும்பெருஞ் செயலை அடிநுனி நோக்கிக்
கரும்பெனக் கருதிக் கடித்துக் கடித்துச்
சுரும்பெனச் சுவைத்துச் சுவைத்து மகிழும்
அரும்பே! மொட்டே! முகையே! மலரே!
வருபெருந் துயரெலாம் வாட்டி வதக்கிக்
கருதிய உரைத்துத் கசடறக் கற்றுத்
தருவென வளந்தரத் தகுதியை உயர்த்திப்
பொருப்பென நிற்கும் பொறுப்புடை யோனே!
மருளல் வாழ்வை மயக்கும் நிலையெனத்
தெரிபொருள் தெளியும் திருவுடை யோனே!        10
விருட்டெனச் செயலைத் தொடங்கும் வீரத்
திருமக னாகத் திருந்துளத் தோனே!
பொருட்டோ இவனெனப் பொறாஅ தவனை
விரும்பா தவனே! வெல்லும் தவனே!
நருட்டோ உசுமாக்கி நாடகத் தோனே!
பெருமை உலகோய்! பிறந்தநாள் வாழ்த்துகள்!
விரும்பிய வெல்லாம் வெற்றி கொண்டு
பொருந்திய உளத்துப் பொறுநர் சூழ
அரும்பெரு வாழ்வை அமைத்து மகிழ்க!
கரும்புளத் தோனே! காளி தாசனே!                         20
                                                                        - தமிழகழ்வன் 

No comments:

Post a Comment