Oct 1, 2024

ஐந்தாண்டுகள் நிறைவு வாழ்த்துக்கள் - உபேந்திர குமார் சிங்கு

உள்ளத் துள்ளே ஓரா யிரங்கதை
வெள்ளம் போலே விரைந்தெழும் கவிதை

புயலில் சிக்கும் புதுப்பட கைப்போல்
முயல முயல முதிர்ச்சி தெரியும்

இயலா தனவெனும் எவ்வகைச் செயலும்
முயலா தனவாம் வேறொரு வழியில்

செயலில் தெரியும் சீரிய எண்ணம்
பெயலில் தெரியும் பெருமழைப் பெருமை

வெற்றுக் காட்டில் விதையை ஊன்றியும்
வெற்றிக் காடாய் விளைத்துக் காட்டுவீர்

தட்டிக் கொடுத்துத் தேரச் செய்வீர்
சுட்டிக் காட்டித் திறமையை வளர்ப்பீர்

பதவியின் பயனோ பலர்க்கும் பயன்பட
உதவுமனப் பான்மையே! உணர்ந்தீர் உபேந்திரரே!

வாழிய எண்ணங்கள் வாழிய சொற்கள்
வாழிய செயல்கள் வாழிய வாழியவே!
                                  - தமிழகழ்வன் சுப்பிரமணி

----

Dear Upen,
Many congratulations on completing 5 years with OpenText!

Here is my poem for you!
Translated by Google.
Refined and rhymed by AI.

----
A thousand tales reside inside,
Poetry flows like the ocean’s tide.

Like a boat adrift in a storm's embrace,
Wisdom is shaped through trials we face.

What seems impossible in one way done,
Awaits another path begun.

Consciousness speaks through deeds we do,
The rain knows what the storm is true.

Plant a seed in barren earth,
And soon a forest will find its birth.

Strike the stone, and it will bend,
As you guide others to ascend.

The privilege of rank is not in might,
But in the power to lift others to flight.

This truth, Upendra, you’ve understood,
And now you live it as you should.

May your thoughts endure the test of time,
May your words inspire in endless rhyme.

May your deeds resound in every heart,
Long live Upendra, in thought, word, and art!

No comments:

Post a Comment