மின்னி மின்னிச் சிரிக்கின்ற
மீன்கள் கோடி வானத்தில்
கண்ணில் பட்ட ஒருமூன்று
கருத்தில் நுழைந்து களிப்பூட்டும்
மின்னும் அவையோ நேர்க்கோட்டில்
மீண்டும் காணோம் எனத்தேடும்
அன்ன நிலவு குழந்தையைப்போல்
ஆர்வத் தோடு நான்களிப்பேன்
பல்வான் அலகு தூரத்தில்
பல்லைக் காட்டும் மீனழகு
நில்லா மேகம் மறைத்தாலும்
நின்றொ ளிர்ந்தொ ளிந்திருக்கும்
எல்லாம் உணர வைக்கின்ற
எண்ணம் கூட்டும் இவ்வுலகில்
இல்லாச் சுவையும் பொதித்திருக்கும்
இன்னும் இன்னும் களிப்பூட்டும்
எண்ணி எண்ணி வியந்திருந்தேன்
எல்லா மீனும் ஒளிருமெனக்
கண்கள் விருந்தால் களித்திருக்கக்
கடிதில் மறையும் சிலமீன்கள்
விண்ணில் தொலைவில் ஒளிர்வதெல்லாம்
விரும்பா தோவந் தருகமைய
நண்ண லில்லை நம்கைக்கு
நடப்ப தில்லை நம்மோடே
- கருத்தாக்கம்: அருண்குமார்
- கவியாக்கம்: தமிழகழ்வன்
Oct 26, 2024
Oct 24, 2024
காரணம் உண்மையா பொய்யா?
காரண மின்றிக் காரிய மில்லை
காரண மொன்றக் கவலைக ளில்லை
காரண மில்லாப் பொய்ம்மையி னாலே
காரியம் நன்மை பெறுவது மில்லை
காலமும் சிலவே கண்களை மறைக்கும்
கடிதினில் உண்மை கருவிழி நிறைக்கும்
காரணம் பொய்யின் காலடி வீழின்
கசப்பென மாறும் வாழ்க்கையும் பாழே!
Labels:
கவிதை
Oct 22, 2024
பொறுமையும் வெறுமையும்
பொறுத்துப் போகப் போக
வெறுத்துப் போக வைக்கும்
எல்லாம் ஓர் அளவுதான்
மீறினால் பெரும்பிளவுதான்
விரும்பாத இடத்தில் கொடுக்கும்
விருந்தும் இனிக்காது கடுக்கும்
பாரதி சொன்னார் அன்று
பாரினில் யாவும் மாயை என்று
சொல்வதற்கொன்றும் இல்லை
சோதனைகட்கு இல்லை எல்லை
மானிடம் மீண்டும் வெல்லும்
நம்பிக்கையில் வாழ்க்கை செல்லும்
Oct 18, 2024
Oct 8, 2024
மனமே மருந்து - நேரிசை வெண்பா
உருவம் இலாதன உள்ள இடமும்
தெரிவதில்லை உன்மனத்தைத் தேடி - வரிவரியாய்
வந்துழலச் செய்யும் வலிகளே மாற்றங்கள்
நொந்தும் மனமே மருந்து
Labels:
கவிதை
Oct 1, 2024
ஐந்தாண்டுகள் நிறைவு வாழ்த்துக்கள் - உபேந்திர குமார் சிங்கு
உள்ளத் துள்ளே ஓரா யிரங்கதை
வெள்ளம் போலே விரைந்தெழும் கவிதை
புயலில் சிக்கும் புதுப்பட கைப்போல்
முயல முயல முதிர்ச்சி தெரியும்
இயலா தனவெனும் எவ்வகைச் செயலும்
முயலா தனவாம் வேறொரு வழியில்
செயலில் தெரியும் சீரிய எண்ணம்
பெயலில் தெரியும் பெருமழைப் பெருமை
வெற்றுக் காட்டில் விதையை ஊன்றியும்
வெற்றிக் காடாய் விளைத்துக் காட்டுவீர்
தட்டிக் கொடுத்துத் தேரச் செய்வீர்
சுட்டிக் காட்டித் திறமையை வளர்ப்பீர்
பதவியின் பயனோ பலர்க்கும் பயன்பட
உதவுமனப் பான்மையே! உணர்ந்தீர் உபேந்திரரே!
வாழிய எண்ணங்கள் வாழிய சொற்கள்
வாழிய செயல்கள் வாழிய வாழியவே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி
----
Dear Upen,
Many congratulations on completing 5 years with OpenText!
Here is my poem for you!
Translated by Google.
Refined and rhymed by AI.
----
A thousand tales reside inside,
Poetry flows like the ocean’s tide.
Like a boat adrift in a storm's embrace,
Wisdom is shaped through trials we face.
What seems impossible in one way done,
Awaits another path begun.
Consciousness speaks through deeds we do,
The rain knows what the storm is true.
Plant a seed in barren earth,
And soon a forest will find its birth.
Strike the stone, and it will bend,
As you guide others to ascend.
The privilege of rank is not in might,
But in the power to lift others to flight.
This truth, Upendra, you’ve understood,
And now you live it as you should.
May your thoughts endure the test of time,
May your words inspire in endless rhyme.
May your deeds resound in every heart,
Long live Upendra, in thought, word, and art!
வெள்ளம் போலே விரைந்தெழும் கவிதை
புயலில் சிக்கும் புதுப்பட கைப்போல்
முயல முயல முதிர்ச்சி தெரியும்
இயலா தனவெனும் எவ்வகைச் செயலும்
முயலா தனவாம் வேறொரு வழியில்
செயலில் தெரியும் சீரிய எண்ணம்
பெயலில் தெரியும் பெருமழைப் பெருமை
வெற்றுக் காட்டில் விதையை ஊன்றியும்
வெற்றிக் காடாய் விளைத்துக் காட்டுவீர்
தட்டிக் கொடுத்துத் தேரச் செய்வீர்
சுட்டிக் காட்டித் திறமையை வளர்ப்பீர்
பதவியின் பயனோ பலர்க்கும் பயன்பட
உதவுமனப் பான்மையே! உணர்ந்தீர் உபேந்திரரே!
வாழிய எண்ணங்கள் வாழிய சொற்கள்
வாழிய செயல்கள் வாழிய வாழியவே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி
----
Dear Upen,
Many congratulations on completing 5 years with OpenText!
Here is my poem for you!
Translated by Google.
Refined and rhymed by AI.
----
A thousand tales reside inside,
Poetry flows like the ocean’s tide.
Like a boat adrift in a storm's embrace,
Wisdom is shaped through trials we face.
What seems impossible in one way done,
Awaits another path begun.
Consciousness speaks through deeds we do,
The rain knows what the storm is true.
Plant a seed in barren earth,
And soon a forest will find its birth.
Strike the stone, and it will bend,
As you guide others to ascend.
The privilege of rank is not in might,
But in the power to lift others to flight.
This truth, Upendra, you’ve understood,
And now you live it as you should.
May your thoughts endure the test of time,
May your words inspire in endless rhyme.
May your deeds resound in every heart,
Long live Upendra, in thought, word, and art!
Subscribe to:
Posts (Atom)