நேரிசை ஆசிரியப்பா
விண்ணில் ஒளிரும் எண்ணில் மீன்கள்
ஒன்றை யொன்றறி யாதே யாயினும்
மிளிரும் அதுபோல் இம்மீ னுக்கும்
யாதொன் றுந்தெரி யாஅ தாயினும்
மிளிர்தல் குறைவிலை எல்லா மறிய 5
வேண்டு மென்னும் எண்ண மதற்கிலை
அறிந்து தானென் செயப்போ கிறது
அதன்வழி யதனெண மதனுணர் வதன்கோள்
எண்ண வரிய வணுக்க ளதன்கூட்
டமைவை நோக்கின் ஒருசெல் லாதலின் 10
உயிருள் ளதுவோ உயிரில் லதுவோ
இறைவன் பார்வைக் கெல்லா மொன்றே
ஒன்று மிலாத ஒருகூட் டாய்ச்சேர்ந்
தென்ன படைத்தென? உயர்ந்தோன் பார்வைப்
பேராழி யுலகும் ஓரணு வாமே 15
தோன்றிய யாவும் தோன்றுயா வற்றையும்
ஊன்றிய உருவங் கொடுத்துப் பகுத்தே
ஆய்ந்து காலம் போக்கு கிறது
முடிந்த வாழ்வை எண்ணிப் பார்க்க,
கடந்தது காலம் மட்டும் 20
ஆற்றிய யாவும் அனர்த்தமா கும்மே
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
விண்ணில் ஒளிரும் எண்ணில் மீன்கள்
ஒன்றை யொன்றறி யாதே யாயினும்
மிளிரும் அதுபோல் இம்மீ னுக்கும்
யாதொன் றுந்தெரி யாஅ தாயினும்
மிளிர்தல் குறைவிலை எல்லா மறிய 5
வேண்டு மென்னும் எண்ண மதற்கிலை
அறிந்து தானென் செயப்போ கிறது
அதன்வழி யதனெண மதனுணர் வதன்கோள்
எண்ண வரிய வணுக்க ளதன்கூட்
டமைவை நோக்கின் ஒருசெல் லாதலின் 10
உயிருள் ளதுவோ உயிரில் லதுவோ
இறைவன் பார்வைக் கெல்லா மொன்றே
ஒன்று மிலாத ஒருகூட் டாய்ச்சேர்ந்
தென்ன படைத்தென? உயர்ந்தோன் பார்வைப்
பேராழி யுலகும் ஓரணு வாமே 15
தோன்றிய யாவும் தோன்றுயா வற்றையும்
ஊன்றிய உருவங் கொடுத்துப் பகுத்தே
ஆய்ந்து காலம் போக்கு கிறது
முடிந்த வாழ்வை எண்ணிப் பார்க்க,
கடந்தது காலம் மட்டும் 20
ஆற்றிய யாவும் அனர்த்தமா கும்மே
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment