உளமார வந்தித்தோம்! விழியாரச் சந்தித்தோம்!!
திருவார்ந்த கார்த்திகைக் குமாரர்தம் வாழ்க்கையிலே
பெருவிஜயம் மனம்இணையும் அமுதவளத் திருவமலத்
திருநாளில் வாழ்த்தியோர்க்குப் பெருநன்றி பகர்வோமே! (1)
நேரிசை வெண்பா
கார்திகையும் காற்றிகையும் காணுபிற நாற்றிகையும்
கார்த்திகையான் கார்த்திகேயன் கார்திகைய - ஆர்த்தபுகழ்
கார்த்திகைவா ளைக்குலம்வாழ் கார்த்திகைமீன் கண்சிமிட்ட
கார்த்திகைக்க திர்மறை கார் (2)
கரவருடத் தாவணியில் காணுபதி னாறில்
விரவும் சுவாதிமதி யோடு - மரபுதவழ்
சுக்கிரனார் நன்னாளில் சுந்தர மன்றலுக்கு
மிக்கமகிழ் வோடுவாழ்த்து க. (3)
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்

No comments:
Post a Comment