Jul 12, 2020

மணிக்குறள் - 2. தாய் தந்தை வாழ்த்து

பூமாதேவி – சேகர்

தாய்

பூமியாந் தேவியெனப் பொன்னான பேருடையள்
யாமிங்குப் போற்றுகின்ற யாய்           11

பொருந்தும் பெயர்க்குப் பொறுமைக் குணத்தாள்
பெருமை எனக்கிது பேறு.                        12

மேலாளர் யாவரும் மேலல்லர் என்னன்னை
மேலாண்மை மெச்சுவேன் யான்          13

எங்காப்பே எண்ணத்தில் யாதுசெய முற்படினும்
அங்காப்பாள் அச்சொல் அறிந்து          14

நாளும் கிழமையும் நன்கறிந்(து) ஆற்றுவாள்
கோளும் வியக்குஞ் செயல்                      15

தந்தை

கற்றறிந்து கேட்டறிந்து காணும் கலையெலாம்
உற்றறிந்து சேகரஞ்செய் தார்                  16

கண்பார்க்கக் கையியற்றும் காணுங் கலைகளை
நண்பாக்கிக் கொண்டார் நயந்து           17

பள்ளிப் படிப்பின்றிப் பாட்டெழுதும் ஆசானாம்
உள்ளுந் தெருக்கூத்(து) உரைத்து            18

வானத் தொளிர்ந்து வழங்கும் பயனெலாம்
தானுணர்ந்து தக்கதுரைப் பார்                19

கலைபல கற்றதோடு காண்பவர்க் கெல்லாம்
நிலைபல நேர்நிறுத்து வார்                        20

No comments:

Post a Comment