வீட்டை மறந்து வினையொன்றே மேற்கொண்டு
நாட்டுக்(கு) உழைப்பார் நயந்து 211
குடும்பம் குழந்தை குழாஅம் மறந்தும்
கடும்பாலை நிற்பார் களித்து 212
கருவென்று கொள்வாரே காத்தல் நமக்காய்ச்
செருவென்று சேர்ப்பார் நலம் 213
துன்பத்தை இன்பென்பார் தூணாகத் தாங்குவார்
என்புருக்கும் அக்குளிரும் ஏற்று 214
எல்லையில் இல்லையெனில் எல்லாம் அழிந்தொழிந்(து)
இல்லாமல் போவோமே இன்று 215
எயில்காத்தல் போலவே எல்லையைக் காக்கத்
துயில்காணாத் தோள்களைப் போற்று 216
அதிரப் பொருதழிப்பார் ஆற்றலைப் போற்று
சதியையே சாகடிப்பார் சாற்று 217
எல்லாய் இயங்குவார் எண்ணத்தில் நிற்பதுவோ
எல்லையைக் காத்தலொன்றே எண் 218
நாட்டுப்பற்(று) ஒன்றே நினைவினிற் கொள்வாரைப்
பாட்டினிற் கொண்டு பரவு 219
பொல்லாப் பகையழித்துப் பொன்வாழ்(வு) அளிக்கின்ற
எல்லை மறவரை ஏத்து 220
Nov 29, 2020
Nov 22, 2020
மணிக்குறள் - 21. குறிக்கோள் கொள்க
குறிக்கோளைக் கொண்டு குறையை அகற்று
வறிஞனாய் வாழாதே! வாழ்! 201
நாளும் நமது குறிக்கோளைக் கைக்கொள்ளக்
கோளும் அயரும் கொடுத்து 202
கொள்கை யிலாதவன் கொள்கை யெதுவெனின்
கொள்கை இழக்கும் குறை 203
நோக்கம் இலாதவன் நோவான்றன் கையிலே
ஆக்கம் இலாஅ(து) அழித்து 204
மறத்தலும் உள்ளம் விடுத்தலும் மாண்போ?
துறவி யெனக்கொள் தவம் 205
அச்சாணி யாவ(து) அகத்துறை கோளேயாம்
பொச்சாஅ வாமை புகழ் 206
குறுங்கோள் நெடுங்கோள் குறைவிலா வாழ்வுக்(கு)
உறுங்கோள் உணர்தல் உயர்வு 207
திட்டம் இடற்குத் தெளிவான கோள்வேண்டும்
எட்டாக் கனியாவ தேது? 208
காலம் அறிந்து கடமை உணர்ந்தாற்றின்
ஞாலம் நினது வழி 209
ஞாலத்தைக் கொள்ளும் நயனறிந்து கோள்கொண்டு
காலத்தோ(டு) ஆற்றிக் களி 210

Labels:
கவிதை - மணிக்குறள்
Nov 15, 2020
பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன் சுப்பிரமணி
‘அகடவிதமது’ என்னும் கவிதைத் தொகுப்பின் மூலம் தனது முதல்நூலின் தலைப்பினாலே அனைவரையும் திக்குமுக்காடச் செய்த இளங்கவி தமிழகழ்வன். சொல்லாற்றலில் வல்லாற்றல் கூட்டும் சுந்தரக் கவிஞரான தமிழகழ்வன் இருபத்தோராம் நூற்றாண்டில் மரபு கவிதையின் அத்தனை வடிவங்களிலும் புகுந்து விளையாடும் ஆற்றல் மிக்கவர். இற்றைத்திங்கள் தமிழ்குதிரின் கதாநாயகனாக வருகிறார். வாருங்கள் அவரைப் பற்றி அறிந்து கொள்வோம்..
தீபங்கள் போற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 1987ஆம் ஆண்டு சேகர் – பூமாதேவி இணையோரின் தவப்புதல்வனாகத் தோன்றியவர் சுப்பிரமணி. தமிழ்மீதுள்ள காதலால் தமிழகழ்வன் என்னும் புனைபெயரைக் கொண்டார்.
பள்ளிப் பருவத்திலே பாடப் பகுதியாக யாப்பிலக்கணம் இடம்பெறாத வகுப்பிலும் தனக்குக் தமிழ் கற்பித்த ஆசிரியர்கள் மூட்டிய ஆர்வத்தீயால் யாப்பிலக்கணம் கற்றுத்தான் பாட்டெழுத வேண்டும் என முயன்று மரபு கவிதைகளை மட்டுமே கைக்கொண்டு வளர்ந்தார்.
பைந்தமிழ்ச் சோலையின் ஆசான் மரபு மாமணி பாவலர் மா.வரதராசன் அவர்களிடமும் பைந்தமிழ்ச் செம்மல் கவினப்பன், பைந்தமிழ்ச் செம்மல் முனைவர் அர.விவேகானந்தன் ஆகியோரிடமும் தமிழ் இலக்கணங்களைக் கற்று முறையாக மரபு கவிதைகளை எழுதி வருகிறார். ‘புலம் மிக்கவரைப் புலமை தெரிதல்’ என்பதற்கேற்பப் பைந்தமிழ்ச் சோலையின்மீதும் பாவலர் மா.வரதராசனார் மீதும் அளவில்லாப் பற்றுடையவர்.
பொறியியல் பட்டம் பெற்று மென்பொறியாளராய்த் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி னாலும் அகவல் பாடும் ஆற்றலில் அறிந்து கொள்ளலாம் அன்னாரின் தமிழ்ப்பற்றை. ஆர்வத்துடன் செய்யும் செயலுக்கு எத்தனை தடைகள் வந்தாலும் அவை தடக்கற்களாக மாறிவிடும் என்பதுபோல, பள்ளிப்படிப்போடு தமிழைக் கற்றல் நின்றுவிடக் கூடாது என, இளநிலைத் தமிழிலக்கியமும் பயின்றுள்ளார்.
கதை, கவிதை, கட்டுரையென இலக்கியத் துறையின் அத்தனை வடிவங்களிலும் வலம் வரும் இளைஞரான தமிழகழ்வன் அவர்கள் பைந்தமிழ்ச் சோலையின் மின்னிதழான தமிழ்க்குதிர் இதழின் முக்கிய ஆசிரியராவும் பணியாற்றுகிறார்.
வாள்வீச்சென ஒளிவிசும் மிகச்சிறந்த பாவகைகளைப் படைக்கும் இவர் கவியரங்க மேடைகளிலும் அறிமுகமாகி அலங்கரிக்கின்றார். அதோடு மட்டுமல்லாமல் மதுரைத் தமிழிலக்கிய மின்தொகுப்புத் திட்டத்தில் (Project Madurai) தன்னார்வலனாக இணைந்து உதவியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
என்கடன் பணிசெய்து கிப்பதே என்ற சான்றோர் வாக்கிற்கிணங்க ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் ஓடோடித் தமிழ்பணியாற்றுமிவர் பைந்தமிழ்ச் சோலையின் உறுப்பினராகவும், எண்பேராயத்தில் உறுப்பினராகவும், பயிற்றுவிக்கும் துணை யாசிரியர்களுள் ஒருவராகவும், பைந்தமிழ்ச் சோலை – திருவண்ணாமலைக் கிளையின் துணைத்தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார் அவ்வியக்கத்தின் மூலமாகக் குழந்தைகளுக்கு இலக்கண முறைப்படியான தமிழ்ப்பெயர்களைப் பரிந்துரைத்தல், செய்யுளிலும், உரைகளிலும் இலக்கணப் பிழைகளைக் களைந்து உதவுதல், யாப்பிலக்கண வகுப்பெடுத்தல் எனத் தமிழ்த்தொண்டு செய்கிறார்.
படிப்பவன் அறிவைப் பெறுகிறான்; படிப்பின் வழியாகப் படைப்பவனே அதில் முழுமையடை கிறான். ஆம் இக்கவிஞரும்
· தமிழர்தம் காலக் கணிதம் எங்கே போனது?
· வடசொற் கிளவி வடவெழுத்து ஒரீஇ…
· தமிழில் பெயர் வைப்பது எப்படி?
· தமிழாதங்கம்
· ஆத்தீகமும் நாத்தீகமும்
· திருமுருகாற்றுப்படை – உரையாடல்
போன்ற தரமான கட்டுரைகளை எழுதிச் சான்றோர் பலராலும் பாராட்டைப் பெற்றுள்ளார். அதோடு மட்டுமல்லாமல் சிறுகதையிலும் கோலோச்சும் இவர்
· அமிழ்தினும் ஆற்ற இனிதே,
· அன்புத்தொல்லை
· நீரில் உறங்கும் நிறைபிணி தீர்க்கும் (வாழ்க்கைக் கதை)
· காந்தி ஆசிரியரின் வகுப்பில் (வாழ்க்கைக் கதை)
போன்ற கதைளையும் எழுதியுள்ளார்.
· புதுமைப் பொங்கல் பொங்குக
· எல்லோரும் கொண்டாடுவோம்
· கலையாத கனவுகள்
· என்னை எழுதச் சொன்னது வானே!
· தமிழெங்கள் வளமிக்க உளமுற்ற தீ
· என்ன தவம் செய்தேன்
· ஏருக்குச் சீர் செய்வோம்
· போற்றப்பட வேண்டியது தாய்மை
· விழுதைத் தேடும் வேர்கள்ஔ
· சமூக முன்னேற்றத்திற்கு வேண்டியது - தொழில் வளர்ச்சி
· வானம் தொடலாம் வா
என்னும் தலைப்புகளில் தமிழகத்தின் பல ஊர்களிலும் கவியரங்க மேடையில் பங்காற்றுகிறார். மேலும் பல கவியரங்கங்களில் தலைவராகவும் பொறுப்பேற்றுள்ளார்.
பைந்தமிழ்ச்செம்மல், நற்றமிழாசான், சந்தக் கவிமணி, ஆசுகவி, விரைகவிவாணர், பைந்தமிழ்க் குருத்து, பைந்தமிழ்க்கதிர், வீறுகவியரசர் முடியரசன் விருது, கவியொளி போன்ற பட்டங்களையும் விருதுகளையும் பெற்று ஆற்றல் மிக்க எழுத்தாளராக வலம்வரும் தமிழகழ்வன் சுப்பிரமணி அவர்களுக்கு ஆனந்தி என்ற மனைவியும், தமிழ்க்குமரன், கதிர்வேலன் என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
பூமலர் தேடிப் புகுந்து நறுந்தேனுண்ணும் வண்டைப்போல் தமிழ்த்தேன் உண்டு யாவருக்கும் வழங்கும் தமிழகழ்வன் சுப்பிரமணி அவர்கள் எல்லா வளமும் பெற்றுத் தமிழன்னையின் புகழைத் தரணியெங்கும் கொண்டு செல்லும் ஒப்பற்ற பணிசெய்ய நாமும் உவகையுடன் வாழ்த்துவோம்.
- பைந்தமிழ்ச் செம்மல் வள்ளிமுத்து
Labels:
கட்டுரை
மணிக்குறள் - 20. செவிச்செல்வம் சேர்
நல்லவை கேட்க நயம்பெருகும் நல்வழியில்
வெல்லவைக்கும் கேள்வி விரும்பு 191
ஆய்ந்தறியக் காண்கின்ற ஐயமெல்லாம் நீங்கிவிடும்
தோய்ந்தறிக கேள்வி தொடர்ந்து 192
ஆசான்சொல் கேட்டறியும் ஆர்வம் உடைத்தாயின்
வீசாதோ தென்றல் வியந்து 193
கல்லா தவருக்கும் கேள்வியே மேலறிவாம்
அல்லா தனநீக்கும் ஆறு 194
நல்லார்சொல் கேட்டல் நனியினி(து) அல்லார்சொல்
கேளாமை யாண்டும் இனிது 195
செவிவழியே சேர்க்கின்ற செல்வம் உளமார்ந்(து)
அவியாய் இனிக்கும் அறி 196
கேள்வி முயல்வதால் கேடறுத்(து) உய்விக்கும்
கோள்வினையும் கோடும் குலைந்து 197
ஊதிப் பெரிதாக்கும் ஊர்வம்பு வேண்டாது
காதினைக் காத்தல் கடன் 198
அறிவுறூஉஞ் செஞ்செவி ஆக்கத்திற்(கு) ஆக்கம்
செறிவுறூஉந் தோறும் செழிப்பு 199
கவிவழிச் சேர்ந்த கலைகட்கும் ஆக்கம்
செவிவழிச் செய்தியாய்ச் சேர்ந்து 200

Nov 8, 2020
மணிக்குறள் - 19. அகத்தை ஆள்
சொற்றோன்றி நிற்கச் சுரங்கமாய் வாய்த்திருக்கும்
வற்றா வரமாம் அகம் 181
வரமென வாய்த்த வயங்ககத்தைக் காத்தல்
தரமாக்கும் நற்புகழ் தந்து 182
அகந்தோன்றும் ஆக்கம் அகிலத்தை ஏற்றத்
தகவாகும் தன்மை யுணர் 183
அகத்தினை ஆளவிட ஆக்கம் அழியும்
அகத்தினை ஆள்க அறிந்து 184
அறிவின் துணையால் அகத்தை நிறுத்திச்
செறிவாய்ந் தறிதல் சிறப்பு 185
அகத்திலே அன்பிருக்க ஆக்கமெலாம் இன்பம்
முகத்திலே தோன்றும் பொலிவு 186
அகத்திணைக்கும் ஆற்றும் புறத்திணைக்கும் ஆதி
அகத்தினை ஆள்கநல் ஆறு 187
மனம்போன போக்கிலே போனால் மனித
இனமழிந்(து) இல்லாது போம் 188
நெஞ்சை நிலைநிறுத்தி நேர்வன தேர்ந்தாய்ந்து
நஞ்சை அகற்று நலம் 189
உள்ளத்தின் ஆற்றலை ஓர்ந்தறிக எந்நாளும்
அள்ளக் குறையா அமிழ்து 190

Nov 1, 2020
மணிக்குறள் - 18. சுற்றுச்சூழல் காப்போம்
சுற்றுப் புறச்சூழல் தூய்மையாய் வைத்திருத்தல்
தொற்றுநோய் இல்லா நலம் 171
சூழலின் தூய்மையைக் காத்தலே யாவர்க்கும்
பாழில்லா வாழ்வு தரும் 172
மண்ணையும் விண்ணையும் மாசுகள் இல்லாது
கண்ணெனக் காத்தல் கடன் 173
தொழில்கள் தொலைநோக்குப் பார்வையொடு வேண்டும்
கழிவுமே லாண்மையும் கொண்டு 174
கழிவை முறையாய்க் கழித்தல் உலகை
அழிவினின்று காக்கும் அறம் 175
இயற்கையைக் காவாக்கால் இல்லைநம் வாழ்க்கை
புயற்கையால் பூவுலகு பாழ் 176
இயற்கை யுணர்க இயைந்து புரிக
செயற்கை சிறப்புத் தரும் 177
சூழலைக் காப்பது சூழலைத் தேர்ந்தொப்ப
வாழலே ஆக்கும் வளம் 178
நிலம்நீர் வளிதீ நெடுவிசும் பைந்தின்
நலத்தினை நாடு நலம் 179
சூழலைக் காக்கும் தொலைநோக்குப் பார்வையே
வாழற்(கு) உறுதி வழி 180

Oct 25, 2020
மணிக்குறள் - 17. முதியோர் இல்லம்
முதியோரைக் காவாதான் மூடன் முறையாய்
மதித்து நடத்தல் மதி 161
பெற்றோரைக் காக்காத பேதையோ பேருலகம்
சுற்றினும் இல்லை சுகம் 162
மாற்றில்லம் காட்டி மதியாத பிள்ளைக்குக்
கூற்றில்லம் தேடி வரும் 163
மெத்தப் படித்தாலும் மேன்மை யடைந்திலன்
பெற்ற மனந்தவிக்கும் போது 164
தனிக்குடும்பம் வேண்டித் தனிமைப் படுத்தின்
தனிமைப் படுவாய் தளர்ந்து 165
பெற்றோரைக் காவாதான் பிள்ளையும் அவ்வழியே
பெற்றோரைக் காவாது போம் 166
ஆண்டாண்டு வாழ்ந்திருந்(து) ஆனந்தம் காண்வயதில்
வேண்டுமோ வேறில்லம் சொல் 167
மீண்டும் மழலை மனத்திற்கு மாறுவோர்க்கு
வேண்டும் அரவணைப்(பு) அன்பு 168
மூத்தோரின் பட்டறிவு முன்னேற்றம் தந்துதவும்
காத்தோரே வாழ்வார் களித்து 169
மூத்தோரின் வாழ்வியல் முத்தான வாழ்வியலாம்
காத்தோம்பிக் கொள்க கனி 170

Oct 18, 2020
மணிக்குறள் - 16. அரசியலார்
நேர்மையைக் கைக்கொண்டு நேர்வன நேர்நிறுத்துங்
கூர்மை அறிவுடையான் கோன் 151
சீர்தூக்கிப் பார்த்துச் சிறப்புடைய வாழ்வமைக்க
ஊர்தூக்கி வாழ்த்தும் உணர் 152
பொல்லா தனசெய்யும் போக்கற்றோன் மன்னனாய்
நில்லான் நிலத்தில் நிலைத்து. 153
பொதுநலம் போற்றாது பொய்ம்மை பரப்பி
மதுநலன் காப்போ மறை? 154
ஆக்கா(து) அழிக்கும் அறிவிலான் ஆட்சியோ
தீக்கிரை யாக்கும் தெளி 155
அரசியலார் ஆயின் அரசியலார் ஏனோ
அரசியல் ஆற்றவரு வார்? 156
பிழைத்துப் பிழைப்பின் பெரும்பழி சேரும்
பிழையற்(று) அரசியல் பேண் 157
முறைதவறி வென்று முறையியற்றும் ஆறு
கறையன்றி வேறென்ன காண் 158
சட்டத்தை மீறித் தனிச்சட்டம் செய்வார்தம்
கொட்டம் அடக்கக் குதி 159
போலியாய் வாழ்ந்து பொறுப்பற்றுப் போகாமல்
வேலியாய் வாழ்பவன் வேந்து 160

Oct 17, 2020
அரங்கேற்றம் - அறம்பொருள் இன்பம் (மும்மணிமாலை)
வெண்பா: அறம் - பைந்தமிழ்ச்செம்மல் தமிழகழ்வன்
கலிவிருத்தம்: பொருள் - பைந்தமிழ்ச்செம்மல் வள்ளிமுத்து
ஆசிரிய விருத்தம்: இன்பம் - பைந்தமிழ்ச்செம்மல் சியாமளா இராசசேகர்
இறை வணக்கம்
எல்லாம் இயக்கும் இயனிலைப் பேரொளியே
எல்லை யிலாத இயற்றமிழிற் - சொல்லெடுத்துப்
பாட வருள்வாய் மணிமாலை மூவர்க்குப்
பாட மருள்வாய் பயந்து
நூல்
அன்பின் வழிய(து) உயிர்நிலை ஆதலின்
அன்பே சிவமென்(று) அறைந்தனர் - அன்போ(டு)
உறவின னாகி உயிர்களைப் பேண
அறத்தினன் என்னப் படும் 1
படுகுழி பகைவரே செய்தாலும் இன்னும்
கொடுஞ்செயல் தினம்பல குவித்தாலும் இன்னல்
கெடுதிகள் இடையிடை மிகுத்தாலும் செல்வப்
படைமிகின் எதிரிகள் தூள்தூளா வாரே..! 2
ஏரகத் தானைப் போற்றி எண்ணிலாப் பாக்கள் பாடிச்
சீரகத் தோடு வேண்டச் சிந்தையில் மலரு மின்பம் !
வாரண முகத்தான் தம்பி மாமயி லேறி வந்து
மாரியாய்ப் பொழியு மன்பால் மட்டிலா இன்பம் தானே !! 3
தானே உரியன் தனக்கே எலாமென்று
வானே தனதாய் வளைத்தாலும் - மானே!
கடைவழிச் செல்கையில் கையிலொன்றும் இல்லை
உடையன ஈதல் உயர்வு 4
உயர்வான நல்லறங்கள் உண்டாக வேண்டின்
அயர்வகற்றிச் செல்வத்தை ஆக்குவித்தல் வேண்டும்
பயிர்வளமும் பொன்வளமும் பல்திறத்து வளமும்
உயிர்வளத்தைச் செய்வதனால் உயர்வென்றும் பொருளே...! 5
பொருளுடன் பொன்னை வீட்டில் பூட்டியே வைத்தி ருப்பின்
வரும்பயன் ஒன்று மில்லை வறுமையால் வாடு வோருக்(கு )
அருங்குணத் தோடே அன்பாய் அளவிலாச் செல்வம் தன்னை
விருப்புடன் பகிர்ந்த ளித்தால் விளையுமே கோடி யின்பம் !! 6
இன்பம் பொருளால் இயலும் பொருளினை
என்செய்தல் என்ப(து) அறமாகும் - என்னையெனின்
அந்த அறத்தினூஉங்(கு) ஆக்கமும் இல்லையே
எந்தப் பொருளுரைப்பீர் இன்று? 7
இன்றுமுதல் அன்றுவரை இவ்வுலகில் செல்வம்
ஒன்றிருந்தால் சுற்றுமுற்றும் சொந்தம்வரும் இன்றேல்
பெண்டாட்டி கைவிடுவள் பிள்ளைகளும் நீங்கத்
திண்டாட்டாம் பலவுண்டாம் தீமைகளும் உண்டே 8
உண்டதும் உறங்கி டாமல் உளத்தினை உறுதி செய்ய
ஒண்டமிழ் நூல்ப டித்தால் ஒளியினால் இருளும் நீங்கிப்
பண்படும் அகத்தி லென்றும் பாங்குடன் பெருகும் இன்பம்
தண்டமிழ் இலக்கி யங்கள் தருவது மின்ப மன்றோ? 9
அன்றுரைத்தார் ஐயன் அறமே முதற்கொண்டு
நின்றுரைத்தார் ஔவை அறம்செய்ய - என்றும்
அறமில்லா வாழ்வஃ(து) அரைவாழ்வே யாகுந்
திறமில்லா வாழ்வு மது 10
துன்பம் விலக்குவதும் சுற்றம் மிகுத்துவதும்
இன்பம் பெருக்குவதும் ஏற்றம் கொடுப்பதுவும்
என்ன வென்றாய்ந்தால் எல்லாம் பணமன்றோ..!
உண்மை..! பொருளின்றி உலகம் இயங்காதே...! 11
தேன்மலர்ச் சோலை வாசம் சிந்தையை மகிழச் செய்யும் !
வான்மழை போடும் தாளம் மனத்தினை இதமாய்க் கொய்யும் !
மீன்களும் விழிசி மிட்டி வெண்மதி யாளைச் சீண்டும் !
வான்தரும் இன்பம் நம்மை வண்ணமாய்ப் பாட வைக்கும் !! 12
வைத்திருக்கும் செல்வத்தால் வாய்ப்பதில்லை நிம்மதி
மொய்த்திருக்கும் சுற்றமெலாம் பொய்யாக - மெய்யுணர
இன்பம் அதிலில்லை ஈயும் வகையறிந்(து)
அன்போ(டு) ஒழுகுதல் ஆறு 13
ஆறும் எட்டுமாய் அடுக்கடுக்காய்ப் பணமிருந்தால்
சோறும் கறிகளும் சுவையோடு பசிநீக்கும்
ஊறு தரும்பசி உடலகன்றால் வேறென்ன
நூறு சிந்தனை நுட்பமாக மலருமன்றோ...! 14
ஓங்கியே விண்ணை முட்டும் உறைபனி மலைகள் கண்டால்
தூங்குதோ வென்ற வெண்ணம் துள்ளலாய் மனத்தில் தோன்றும்!
பாங்குடன் கவிபி றக்கும் பைந்தமிழ் அதில்சி றக்கும்!
தேங்கிய இன்ப மெல்லாம் தேடியே வந்து சேரும்!! 15
சேர்க்கும் பொருள்தானாய்ச் செல்லும் அறிவீரே
ஆர்க்கின்ற எண்ணமெலாம் ஆடிவிடும் - நேர்மைக்
குணத்தால் மனமோ குளிரும் அதனைப்
பணத்தால் படைத்தல் அரிது 16
அரிதினும் அரிதெலாம் அடுப்படி வந்துநிற்கும்
பெரிதினும் பெரிதெனப் பெரும்பணம் நீகுவித்தால்
அருளதும் அன்பதும் அழியாநற் புகழெல்லாம்
பொருளதன் பின்புலம் அணியணியாய்ப் பொருந்திநிற்கும் 17
நின்றுநி லைக்கும் வாய்மை நிமிர்வுடன் வாழ வைக்கும் !
துன்பமே சூழ்ந்த போதும் துடைத்திடும் கையாய் நீளும் !
நன்றிதை யறிந்து கொண்டால் நன்மைகள் தாமே சேரும் !
இன்பமும் தேடி வந்தே இறுக்கமாய் அணைத்துக் கொள்ளும் ! 18
கொள்கையில் நிற்கும் குறைவில் தவத்தொடு
உள்ளு வனவும் மொழிவனவும் - தெள்ளிய
நீராய்ப் பயனீயும் நீர்மையுள வாழ்வினுக்(கு)
யாரோ இணைகூறு வீர் 19
வீரனெனக் கூறுவோரும் வெல்கவியைப் பாடுவோரும்
காரிருளின் வெண்ணிலவாய்க் காட்சிதந்து பொலியவேண்டின்
தோரணையாய்ப் பல்பொருளும் தொகைதொகையாய்ப் பணவளமும்
சீருடனே செய்துவைத்தால் சிறப்பொளிரும் உண்மைதானே..! 20
உண்மையாய்ச் சொல்வ தாயின் உயரிய எண்ணத் தோடு
வண்மையாய் மூத்தோர்ப் பேணி வாழ்த்தினை வரமாய்ப் பெற்று
மண்ணுள நாள்வ ரையில் மதிப்புடன் நடத்தி வந்தால்
கொண்டலாய்ப் பொழியும் அன்பில் கூடுமே இன்பம் வாழ்வில் !! 21
வாழ்நாளோ கொஞ்சம் வகையிலாச் செய்தொழிந்து
தாழ்வது நன்றோ தனையிழந்து? - பாழ்படா
உள்ளந் தனைக்கட்டி ஊர்போற்ற வாழ்கவே
வள்ளண்மை வாழ்வின் புகழ் 22
புகழ்வளம் கூடும் பொன்பொருள் கூடின்
இகல்பகை நீங்கும் இடர்பல ஓடும்
மகிழ்வுதுஞ் சேரும் மனநிலை நாளும்
அகலொளி ஆகும் அன்பதும் மிகுமே..! 23
அன்பது மிகுந்த உள்ளம் ஆலய மாகு மன்றோ?
பொன்னொளி பெருக்கெ டுக்கப் பொற்புடன் இறையே வாழும்
தன்னையே அறியும் ஞானம் தன்மையாய்த் தானே வாய்க்கும் !
உன்னத நிலையில் ஆங்கே ஒப்பிலா இன்பம் தோன்றும்! 24
தோன்றா எழுவாயாய்த் தொக்கும் அறமென்று
தான்றோன்றி யாய்த்திரிதல் தக்கதன்று - தோன்றா(து)
இருந்தும் பயனதுவே இவ்வாழ்வுக்(கு) ஏற்றம்
தருவதும் அஃதே தகுந்து 25
தகுந்ததைத் தகுந்தவர்க்குத் தகுந்தபடித் தருதற்குத்
தகுதியைத் தருவதெல்லாம் தகுந்ததெது தகுபொருளே
தகுதியைத் தரணியிலே தரமுயத்தும் தனிப்பொருளைத்
தகுதியாய்த் தனித்தாய்ந்து தக்கவர்க்குத் தளைத்தோதே! 26

ஓதுக நல்ல வற்றை ஊற்றென அறிவு மூறும்!
தீதறக் காக்கும் அஃதே சீருடன் வாழ வைக்கும்!
பேதைமை நீக்கி விட்டுப் பெருமகிழ் வெய்தச் செய்யும்!
ஆதலின் கற்றல் இன்பம் அகத்திலே பதிய வைப்பீர் !! 27
வைப்பீர்க்கும் நீர்போல் வயங்கும் அருளுடைமை
மெய்ப்பித்து மேன்மைகொள் நெஞ்சமே - பொய்ப்பித்துப்
பீடித்துத் துன்பப் பிறப்பாவ(து) ஐயகோ
வேடிக்கை வேண்டா விதிர்ப்பு 28
புன்னகை அதரத்தில் பூக்க வேண்டுமா
நன்னலம் உடலெங்கும் நாட்ட வேண்டுமா
பொன்பொருள் செல்வத்தைக் போற்றி மிகுத்திடு
இன்னிலம் உன்தாளில் ஏங்கிக் கிடக்குமே...! 29
கிடப்பதே இன்ப மென்று கிஞ்சித்து மெண்ண வேண்டா !
நடப்பவை ஈச னாலே நம்பிடு பெருகும் இன்பம் !
கடைவழிக் கருள்பு ரிந்து கனிவுடன் துணையி ருப்பான்
முடிவிலா முதலைப் போற்றி முழுதுமாய்ச் செய்வாய் அன்பே !! 30
நூற்பயன்
ஆவலாய் அரங்கி லேற்ற அறம்பொருள் இன்பம் என்று
மூவரும் ஒன்றி ணைந்து மும்மணி மாலை செய்தோம்!
பாவலர் சோலை தன்னில் பைந்தமிழ் மணக்கும் மாலை!
நாவினால் பாடி நீவிர் நற்பயன் எட்டு வீரே!!

கவிதை - சிற்றிலக்கியம்
Oct 11, 2020
மணிக்குறள் - 15. ஐம்பொறி அடக்கு
அளவினில் மிஞ்சின் அமிழ்தமும் நஞ்சாம்
களவின்றி ஐம்பொறியைக் கா. 141
தொற்றுகின்ற நுண்மிகளைத் தூர விலக்கிவைத்துப்
பற்றுகின்ற ஐம்பொறியைக் கா 142
உடலின் நலனே உளத்தின் நலனாம்
உடலினை ஓம்பல் உயர்வு 143
நல்லன பேசுகின்ற நாவுடை வாயினால்
பொல்லா தனவிலகும் போற்று 144
வாய்சொல்லில் உண்மை வளம்வாழ அவ்வகத்து
வாய்ச்சொல்லை வாய்மையென் பார் 145
பார்ப்பதால் பற்றும் பயனில யாவையும்
ஆர்ப்பதால் நெஞ்சுக்(கு) அழிவு 146
கண்களால் கைதுசெய் கைப்பேசி நம்முடைய
கண்களைக் கைது செயும். 147
மூக்கைத் துளைக்கும் முடிவிலாப் பண்டத்தால்
நாக்கைத் துளைக்க நலிவு 148
நல்லன கேட்டலே நல்வழிக்குப் பாதையாம்
அல்லன நீக்கல் அறிவு 149
மெய்வாய்கண் மூக்குசெவி மேன்மை யுணர்ந்தறிந்து
பொய்வாயில் வீழாது போற்று 150

Subscribe to:
Posts (Atom)