Apr 25, 2021
மணிக்குறள் - 43. கீழ்மையகற்று
எய்யா நிலைக்கும் இடன் 421
எதுவோ எதுவோ எதுவு மிழைக்கும்?
மதுவே மதுவே யது 422
குணங்குன்றி நிற்கக் குறையாற்றும் நெஞ்சு
குணங்குன்றக் குன்றலுங் குன்று 423
ஒழுக்கம் இலாத ஒருசெயலும் ஒன்றா(து)
இழுக்கத்(து) இருத்தி விடும் 424
கீழ்மைக் குணமெலாம் கேடுறச் செய்தலான்
வீழ்வதற்கு வாழ்வாம் விதி 425
கோடியாய் நிற்கக் கொடிகட்டி யாண்டாலும்
கோடுளத்துக் கீழ்மை கொடிது 426
வாழ்வுக் கணியாய் வகையா யமைந்தாலும்
தாழ்வுக் கிழுக்கும் தவறு 427
பிறன்பொருள் வௌவீஇப் பேராக்கங் கொள்ளல்
அறனன்(று) அழிவினுக்(கு) ஆறு 428
வாழ்முறை யல்லன வாழ்வளித்தல் போலாகிப்
பாழ்முறைக்(கு) ஆக்கும் படி 429
கீழ்மைக் குணமகற்றிக் கொள்க அருளுள்ளம்
வாழ்வாங்கு வாழும் வழி 430
Apr 23, 2021
முருகாதலம் - காரிகை - பகுதி 2
பைந்தமிழ்ச் செம்மல்
தமிழகழ்வன் சுப்பிரமணி
வழிபடும் ஆர்வலர் வாழ்வுக்(கு) அணியென வாய்ப்பவனே!
விழிபட வேண்டி விருப்பொடு நின்றேன் விளைப்பவனே!
அழிபடல் இன்றி அகிலத்தார் உள்ளத்(து) அடியிருந்து
செழிபட வேண்டும் இயற்கைவே ளாண்மை சிறந்துலகே! 11
சிறந்து விளங்கவென் சிந்தனைக் குன்றன் றிருவருளைத்
திறந்து விடுக சிறுதுளி யேனும் செவியுணரும்
வறந்திரு காலம் வரந்தந் தருளும் வடிவழகா!
திறந்தந் தருள்க செயலறி யேனிச் சிறியவனே! 12
சிறுபரு வத்திருந் தென்னுடைச் சிந்தை செதுக்கிவழி
உறுபரு வத்தே உடையன வாக்கி ஒளிர்பவனே!
உறுசெயல் யாவும் உயருளச் சூழ்ச்சியில் ஓங்குதலுக்(கு)
அறுமுக வேலா! அருள்தரும் வேளா! அருமணியே! 13
மணிமா மயிலினில் மாவுல கெல்லாம் வலம்வரவே
கிணிகிணி கிண்கிணி யென்றொலி கேட்டுக் கிளர்ந்தெழுவேன்
அணிமொழி யாளின் அகத்தைக் களவுசெய் ஆருயிர!
கணிநீ யெனவழி காட்டிக் கனிதலின் கள்ளமிலேன் 14
கள்ள மிலாது கரும்பாய் இனிக்கக் கடத்தியுமிவ்
வுள்ளம் படும்பா(டு) உணர்வு படும்பா(டு) உணர்ந்தனையோ
கொள்கை முரணால் கொளாது நடக்கும் குடிமையினைத்
தெள்ளிய பாதையில் தேற்றி அருளுக தென்னவனே 15
தென்மொழி யானே திறலுடை யானே திருக்குமர!
இன்மொழி யாலுனை ஏத்தி மகிழ இருள்விலக்கும்
நன்மொழி யானே நலம்வேண் டினனே நயந்தியைந்த
பின்மொழி வேறு பிறக்குமோ நாவில் பெருமையனே 16
பெருங்குழப் பத்தைப் பெயர்த்து விழச்செய் பெருந்திறனை
அருளுக வேந்தே அருவி யெனுநின் னருள்விழியால்
பெருந்திர ளாகப் பெருந்திற லோடு பிணக்குடையார்
வருவது கண்டவர் தோள்கள் வருந்தப் பொருதவனே! 17
பொருப்பினைக் காக்கும் பொறுப்புடை யோனாய்ப் பொருந்தியகம்
விருப்புற் றமர்ந்து வினைதீர்த் தருளி விளைவளிக்கும்
ஒருதனிச் செம்மல் உயர்தமிழ்ச் செல்வன் உளங்கனிந்த
அருந்தவச் சேயோன் அமர்க்களம் வென்றான் அமரருக்கே 18
அமர முனிவர்தம் அல்லல் அகற்றி அவனியிலே
தமராய் வருவாரைத் தாங்கி அருளுந் தமிழவனே!
உமது கழனாடி ஊக்கந் தனைத்தேடி ஓடிவந்தேன்
எமது வழக்கை எடுத்தருள் வாயே எழிலவனே! 19
எழீஇ லெனுஞ்சொற்(கு) இலக்கண மாய இறையவனே
பொழீஇ லமர்ந்தாயைப் போற்றிக்கொண் டோடி வருபவர்தம்
இழீஇ நிலைமாற்றி இன்பெ னமுதூட்டி ஏற்றவரைத்
தழீஇக் கொளுந்தேவே! தாம்நினைப் பாரோ தலையெழுத்தே! 20
(தொடரும்)
Apr 18, 2021
பைந்தமிழ்ச்செம்மல் 'ஆதிகவி' சாமி.சுரேஷ் அவர்கள்
மணிக்குறள் - 42. ஆற்றுவளமே சோற்றுவளம்
பெயர்விளங்கிச் சீர்நிறுத்தும் நீர் 411
ஓடும் வழியில் உயர்செல்வம் தேடிக்கொண்(டு)
ஆடும் அரவமொ(டு) ஆங்கு 412
ஆறமைத்துச் செல்லும் அழகிய பண்பினால்
ஆறெனவே ஆனாள் அவள் 413
ஆற்றின் அருநீரால் ஆயது நாகரிக
மாற்றம் மனிதனின் வாழ்வு 414
ஆற்றுநீ ரில்லையேல் ஆகுமோ மாமருதம்?
வேற்றுமை யின்றி விரும்பு 415
இயற்கையின் சீர்நிலைக்(கு) இன்றி யமையா
முயற்சி யுடையாள் அவள் 416
ஆற்றுவளங் காத்தல் அழிவில்லா வாழ்வீயும்
சோற்று வளத்திற்குத் தூண் 417
ஆறின்றிச் சோறில்லை ஆக்கங்கள் ஏதுமிலை
ஊறின்றிக் காத்தல் உறவு 418
பல்வகைத் தாவரம் பல்லாண்டு வாழ்ந்திருக்கும்
நல்வரம் ஈயும் நமக்கு 419
ஆற்றுநீர் தேக்கி அணைத்துப் பயன்கொள்வோம்
போற்றுவோம் பொன்னி புணர்ந்து 420
Apr 17, 2021
சின்ன கலைவாணர் விவேக்
மாட்சிமை போற்றும் உலகு 1
சின்ன கலைவாணர் சிந்திக்க வைத்தினிக்கும்
கன்னலாய்ச் சேர்த்தார் சிரிப்பு 2
சான்றாய்த் திகழ்ந்தார் சமுதாயம் முன்னேறத்
தோன்றுகோள் கொண்டார் தொடர்ந்து 3
பொதுநோக்கு நோக்கிப் புதையலைத் தோண்டி
இதுநோக்கென்(று) இட்டார் மரம் 4
சிந்திக்க வைத்துச் சிரிக்கவும் வைத்தார்நம்
சிந்தைக்குத் தந்தார் வரம் 5
நகைவகை நான்கும் நயமாய் நிறுத்தித்
திகைக்கச் செயல்பட்ட தேன் 6
காட்சியின் மாட்சியில் மீட்சிகொள் நெஞ்சமே
ஆட்சியில் நின்றார் அணைத்து 7
அடாதன பேச அடாதன ஆகும்
விடாதெடுத்துக் காட்டி யவர் 8
உள்ள மிருந்தால் உயர்ந்தன செய்யலாம்
தெள்ளத் தெளிவாக்கி னார் 9
பொன்னுடல் நீங்கிப் புகழுடல் தாங்கினார்
தன்னுட லாய்மரங்கள் சான்று 10
Apr 11, 2021
மணிக்குறள் - 41. நாமிருவர் நமக்கிருவர்
அளவான நற்குடும்ப மே 401
பன்னிரண்டு பெற்ற தலைமுறை செல்வமின்றி
இன்னலில் வாழ்ந்தது காண் 402
மக்கள் தொகைபெருக மாவளங்கள் போமிங்குத்
தக்கவாழ் வில்லை தடு 403
நமக்கிருவர் போதுமென நாம்கட்டுக் கொள்வோம்
நமக்கதுவே நன்மையாம் நாடு 404
பொறுப்பின்றிப் பெற்றுப் பொருளின்றி வாழ்தல்
வெறுப்புக் கிடனாம் விலக்கு 405
நற்குடும்பக் கட்டுப்பா(டு) ஓர்ந்து நலங்கொள்க
பொற்குடும்ப மாய்வாழ்க பூத்து 406
பெருகிய மக்கள் தொகையால் வளமும்
பொருளும் சுருங்குதல் காண் 407
இன்பமிகு வாழ்வுக்(கு) இரண்டே பெறல்நன்று
துன்பம் விடாமுயற்சி இங்கு 408
அளவின்றிப் பெற்றெடுத்தல் ஆய வளமன்(று)
உளத்திருத்தி வாழ்க உயர்ந்து 409
ஆண்டாண்டு கூட்டுவார் ஆண்வேண்டும் என்றிருப்பார்
ஆண்டவா அவ்வுளத்தை மாற்று 410
Apr 4, 2021
மணிக்குறள் - 40. நாட்டு மருத்துவத்தை நாடு
பாடுக பண்பாட்டைக் காத்து 391
மூலிகை கண்டாய்ந்து முத்தாகச் சேகரிப்போம்
வேலியாய்க் காக்கும் உயிர் 392
புத்துணர்வு பூக்கப்பூ மாதேவி தானீந்த
அத்தனையும் நாடல் அறிவு 393
உணவே மருந்தாம் உணரப் பயக்கும்
பணம்வேண்டா வேண்டு நலம் 394
வருமுன்னர்க் காக்கும் வகைமை வகுத்தார்
அருமை யுணரல் அறிவு 395
இயற்கையோ டொன்ற இனிதாக வாழ்வாம்
துயர்நீக்கும் நாட்டு மருந்து 396
பச்சிலை நாடிப் பயன்கொள்வோம் ஆய்ந்தீந்தார்
மெச்சுவோம் மேன்மை யறிந்து 397
நாட்டு மருத்துவம் வீட்டு மருத்துவமாம்
பாட்டியின் கையில் பலன் 398
தாவரங்கள் தாமீயும் தாவா வரங்கொள்ளச்
சாவருமோ? வாழ்வாய் தழைத்து. 399
திருமுருகத் தெய்வம் திருந்தியவாழ் வீயும்
மருத்துவ மாமணியாம் வாழ்த்து. 400
Mar 28, 2021
மணிக்குறள் - 39. மூடப் பழக்கம் முடக்கு
கண்கட்டி ஏமாற்று வார் 381
அச்சங் கொளச்செய்வார் ஆயிரந் தான்செய்வார்
நச்சரவம் போல்வார் நசுக்கு 382
மந்திரங் காலாம் மதிமுக்கா லாமென்று
தந்திரம் செய்வாரைத் தாக்கு 383
ஒன்றுமிலா ஒன்றனுக்(கு) ஒன்றென்று தான்கூட்டும்
ஒன்றாத வாழ்வை ஒழி 384
பொச்சாப் புடைமை பயன்படுத்தி நந்தலையில்
பச்சையங் குத்துவார் பார் 385
கேடழிக்கும் கேள்வி யறிவால் வினாவெழுப்பி
மூடப் பழக்கம் முடக்கு 386
வாடச் செயுமந்த வாழ்வுக் குதவாத
மூடப் பழக்கம் முடக்கு 387
செறிப்பச் செயுமறிவால் செவ்வினை ஆற்றி
முறிப்பாயம் மூடத் தனம் 388
காலத்திற் கேற்ற கருத்தாய்ந்து கட்போமே
ஆலமெனும் மூடத் தனம் 389
நலனில்லா மூடப் பழக்கம் நசுக்கப்
புலன்றெளிந்து வாழும் புவி 390
Mar 27, 2021
பெருங்கவிக்கோ கவினப்பன் தமிழன்
விரித்துரை செய்த யாவும்
வியந்துளம் கொள்க வென்று
திரித்துறைந் தனவும் சொல்லித்
திரிபடா வெண்ண மேற்றிப்
பிரித்துநான் கியலைத் தந்து
பிரித்துமேய் வழியுங் காட்டிப்
பரிசெனப் பாட்டே தந்த
பண்புடை நெஞ்சம் போற்றி!
Mar 21, 2021
மணிக்குறள் - 38. உன்னை உணர்
சொன்னாரே சாக்கிரட் டீசு 371
உன்னை உணர்வாய் உயர்ந்த அறிவாகும்
பொன்னாய் உரைத்தாரைப் போற்று 372
என்ன செயவேண்டும் என்னும் தெளிவெல்லாம்
உன்னை உணர வரும் 373
கடுஞ்சினத்தாற் காயாது காக்கும் வழிசெய்
விடுந்துன்பம் உன்னை உணர்ந்து 374
கண்ணாடி முன்னின்று காணும் புறம்போல
எண்ணத்தால் ஆடும் அகம் 375
அகக்கண்ணால் நோக்கி அழகுசெய் ஆற்றல்
தகவமைந்து நன்மை தரும் 376
ஆற்றல் பிறக்கும் அகத்தை அறிந்தாற்ற
ஆற்றல் அமைதி தரும் 377
ஊரும் உறவும் உணர்ந்து பயன்செய்க
பேரும் புகழும் பிறப்பு 378
எல்லா உயிருமிங்(கு) இன்புற்று வாழற்காய்
எல்லாம் இயற்றுக ஈந்து 379
மனிதனாய் வாழ மனம்வைக்க மண்ணில்
புனிதனாய்ப் பூப்பாய் பொலிந்து 380
