எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
சிங்காரச் சென்னையிலே சாயுங் காலம்
சுறுசுறுப்புச் சாலையிலே சிறுவர்க் கூட்டம்
அங்குமிங்கும் விழிவைத்துக் கடந்து செல்ல
அங்குமிங்கும் வேடிக்கை பார்த்தி ருக்கும்
தங்கையினைத் தன்கையால் தாங்கி நின்று
தன்பொறுப்பை உணர்ந்திழுத்தே ஏகும் அண்ணன்
தங்கையினைத் தன்கையாய்த் தன்ம னத்தில்
தானிறுத்திப் பேரன்பை உணர்த்தி னானே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
சிங்காரச் சென்னையிலே சாயுங் காலம்
சுறுசுறுப்புச் சாலையிலே சிறுவர்க் கூட்டம்
அங்குமிங்கும் விழிவைத்துக் கடந்து செல்ல
அங்குமிங்கும் வேடிக்கை பார்த்தி ருக்கும்
தங்கையினைத் தன்கையால் தாங்கி நின்று
தன்பொறுப்பை உணர்ந்திழுத்தே ஏகும் அண்ணன்
தங்கையினைத் தன்கையாய்த் தன்ம னத்தில்
தானிறுத்திப் பேரன்பை உணர்த்தி னானே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment