நாளைய
நாட்டின் தூண்களுக்கு
நன்னெறி ஒழுக்கம் நற்பண்பு
நாளும் கற்றுக் கொடுப்பதிலே
நானுளம் மகிழ்வேன் ஆசிரியர் 1
ஆசெனும் குற்றம் அறியாமை
அனைத்தையும் நீக்கித் தன்னைத்தான்
அறிந்திடச் சிறந்த வழிகாட்டி
அதனை நானும் நன்குணர்ந்தே 2
புத்தகப் பாடம் மட்டுமின்றி
புலமை
வளரும் அளவிற்கு
வித்தகம் விதைத்துப் பண்படுத்தி
வியக்கும் உலகம் எனச்செய்வேன் 3
பொறுமை யுடனே மாணவர்க்குப்
புரியும் வண்ணம் எடுத்துரைப்பேன்
திறமை தன்னை வெளிக்கொணர்ந்து
சிந்தை வளம்பெற வழிசெய்வேன் 4
பிறரை மதித்து நலம்போற்றும்
பண்பா
டுடைமை புலப்படுத்தி
அறவழி நின்று வாழ்வினிலே
அகிலம் போற்ற வழிசெய்வேன் 5
உலகில் உன்னதப் பணியிதுவே
உயர்சமு
தாயம் நிலைபெறவே
கலைகள் யாவும் வளம்பெறவே
கருவாய் இருப்ப திப்பணியே 6
கல்விச் செல்வம் கனிச்செல்வம்
கல்வி
ஒன்றே உலகத்தை
நல்வழிப் படுத்தும் என்பதனை
நாளும் மகிழ்வுடன் எடுத்துரைப்பேன் 7
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
நன்னெறி ஒழுக்கம் நற்பண்பு
நாளும் கற்றுக் கொடுப்பதிலே
நானுளம் மகிழ்வேன் ஆசிரியர் 1
ஆசெனும் குற்றம் அறியாமை
அனைத்தையும் நீக்கித் தன்னைத்தான்
அறிந்திடச் சிறந்த வழிகாட்டி
அதனை நானும் நன்குணர்ந்தே 2
புத்தகப் பாடம் மட்டுமின்றி
வித்தகம் விதைத்துப் பண்படுத்தி
வியக்கும் உலகம் எனச்செய்வேன் 3
பொறுமை யுடனே மாணவர்க்குப்
புரியும் வண்ணம் எடுத்துரைப்பேன்
திறமை தன்னை வெளிக்கொணர்ந்து
சிந்தை வளம்பெற வழிசெய்வேன் 4
பிறரை மதித்து நலம்போற்றும்
அறவழி நின்று வாழ்வினிலே
அகிலம் போற்ற வழிசெய்வேன் 5
உலகில் உன்னதப் பணியிதுவே
கலைகள் யாவும் வளம்பெறவே
கருவாய் இருப்ப திப்பணியே 6
கல்விச் செல்வம் கனிச்செல்வம்
நல்வழிப் படுத்தும் என்பதனை
நாளும் மகிழ்வுடன் எடுத்துரைப்பேன் 7
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment