அடி அந்தாதி
எனைத்தேட வைத்தாள் நிதமும்;
நிதமும் நினையாமல் நின்று;
நின்ற சொல்லேது? நில்லாமல் போகும்;
போகும் வழிதான் உணரேன்;
உணவும் உறக்கமுமெப் போது?
போது நெஞ்சில் கரைந்து போனதை;
போனது போனதுதா னெனப்போதனை
எப்போதிணை என்னெஞ்சே இப்போதினை;
தினைமாவுந் தேனுமாய்த் தேர்நெஞ்சம்
தேர்நெஞ்சம் அதுதாங்கும் பூங்கொடி
பூங்கொடி தேடாள் எனை.
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
எனைத்தேட வைத்தாள் நிதமும்;
நிதமும் நினையாமல் நின்று;
நின்ற சொல்லேது? நில்லாமல் போகும்;
போகும் வழிதான் உணரேன்;
உணவும் உறக்கமுமெப் போது?
போது நெஞ்சில் கரைந்து போனதை;
போனது போனதுதா னெனப்போதனை
எப்போதிணை என்னெஞ்சே இப்போதினை;
தினைமாவுந் தேனுமாய்த் தேர்நெஞ்சம்
தேர்நெஞ்சம் அதுதாங்கும் பூங்கொடி
பூங்கொடி தேடாள் எனை.
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment