வேகமாய் ஓடிய காலங்கள்
வேதனை நெஞ்சில் கோலங்கள் 1
ஒருவனை ஒருவன் ஓட்டுதலும்
கோபம் மகிழ்ச்சி காட்டுதலும் 4
நெஞ்சம் தொட்ட பேச்சுகள்
நேயம் வைத்த மூச்சுகள் 5
நேரில் காணல் இனியரிது
பாரில் இக்கொடு மைபெரிது 6
உணர்வுப் பூர்வச் சிந்தனைகள்
உடனே அவற்றின் நிந்தனைகள் 7
களிக்கும் வகுப்பு இனியமைதி
கண்களில் நீரின் நினைவிறுதி 8
கூடி வாழ்ந்த பறவைகள்
தேடிச் செல்லுதே பலதிசைகள் 9
குன்றின் தீபச் சுடரொளிகள்
குவலயம் எங்கும் படரொளிகள் 10
கூட்டச் செறிவு மேகங்கள்
குளிர்ந்த மழைத்துளித் தூறல்கள் 11
வேடிக்கை நிந்தனை விளையாட்டு
வீரியப் படிப்பு இனியில்லை 12
கண்களைத் திறந்தே உறங்குதலும்
உறங்காக் கனவும் இனியில்லை 13
எல்லாம் எல்லாம் முடிந்ததுவே
இன்னொரு பொழுதும் விடிந்ததுவே 14
- தமிகழகழ்வன் சுப்பிரமணி சேகர்
வேதனை நெஞ்சில் கோலங்கள் 1
கொடுமை வார்த்தைச் சிதறல்கள்
கொண்டவன் நெஞ்சப் பதறல்கள் 2
கொண்டவன் நெஞ்சப் பதறல்கள் 2
இல்லை இனியே என்றாலும்
வாரா இனியும் அந்நாளும் 3
வாரா இனியும் அந்நாளும் 3
ஒருவனை ஒருவன் ஓட்டுதலும்
கோபம் மகிழ்ச்சி காட்டுதலும் 4
நெஞ்சம் தொட்ட பேச்சுகள்
நேயம் வைத்த மூச்சுகள் 5
நேரில் காணல் இனியரிது
பாரில் இக்கொடு மைபெரிது 6
உணர்வுப் பூர்வச் சிந்தனைகள்
உடனே அவற்றின் நிந்தனைகள் 7
களிக்கும் வகுப்பு இனியமைதி
கண்களில் நீரின் நினைவிறுதி 8
கூடி வாழ்ந்த பறவைகள்
தேடிச் செல்லுதே பலதிசைகள் 9
குன்றின் தீபச் சுடரொளிகள்
குவலயம் எங்கும் படரொளிகள் 10
கூட்டச் செறிவு மேகங்கள்
குளிர்ந்த மழைத்துளித் தூறல்கள் 11
வேடிக்கை நிந்தனை விளையாட்டு
வீரியப் படிப்பு இனியில்லை 12
கண்களைத் திறந்தே உறங்குதலும்
உறங்காக் கனவும் இனியில்லை 13
எல்லாம் எல்லாம் முடிந்ததுவே
இன்னொரு பொழுதும் விடிந்ததுவே 14
- தமிகழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment