தரவு கொச்சகக் கலிப்பாக்கள்
அணிகொண்ட செங்காந்தள் அச்செவ்வி ளங்குமர!
துணிகிளர்வுச் சாதனைகள் செய்திடவா செந்தமிழ!
கணிகண்ணன் பெறுமருளாய் மணிவண்ணன் பேரருளை
மணிகண்ட! நீர்பெறுக! மகிழ்சிக்கண் ணீர்பெருக 1
ஒளியம்பு லித்தோழ! உயர்பண்பு கூரறிவ!
களிப்புடனே கருதரிய செயல்யாவும் புரிந்திடுக!
கிளிபேசும் மழலைச்சொல் உளங்குளிர உதிர்த்திடுக!
மிளிர்பொன்மு கத்தழக! வளம் யாவும் பெற்றிடுக! 2
தேமாந்தண் பூத்தமிழாய் வாழியவே எந்நாளும்
தேமாந்தன் உலகிற்கென் றினியவனாய் வலம்வருக!
தேமார்ந்து பல்லாண்டு நலம்வாழ்க! குலம்வாழ்க!
தேமாரம் சூடியுல காண்டிடுக இளந்தளிரே! 3

-
தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
2 comments:
ஒரே நாளில் இத்தனை பதிவுகள் எழுதினால் எப்படி :)
ரொம்ப நாளாகப் பதிவு போடாமல் இருந்ததன் தாகம் :)
Post a Comment