நேரிசை ஆசிரியப்பா
ஆரோன் நெஞ்சில் ஆர்ந்தோன்! செஞ்சொல்
வீரன்! தேர்செயல் விளக்கம் தெளிந்த
பொருளன்! நெஞ்சுரம் மிக்கன்! பொன்னிகர்
அருளன்! அவற்கிங் கில்லை தன்னிகர்
'என்செய லாகா? எல்லாம் இயலும்'
பொன்சொல் உதிர்த்துப் பொன்செயும் மருந்தன்!
ஈரெட் டெனும்பே றெல்லாம் பெற்றுப்
பார்போற் றிடக்காண் பிறந்த நன்னாள்
வாழிய பண்படு பேறுள்ளம்
வாழிய வளம்நலம் உளம்நிறைந் தற்றே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
ஆரோன் நெஞ்சில் ஆர்ந்தோன்! செஞ்சொல்
வீரன்! தேர்செயல் விளக்கம் தெளிந்த
பொருளன்! நெஞ்சுரம் மிக்கன்! பொன்னிகர்
அருளன்! அவற்கிங் கில்லை தன்னிகர்
'என்செய லாகா? எல்லாம் இயலும்'
பொன்சொல் உதிர்த்துப் பொன்செயும் மருந்தன்!
ஈரெட் டெனும்பே றெல்லாம் பெற்றுப்
பார்போற் றிடக்காண் பிறந்த நன்னாள்
வாழிய பண்படு பேறுள்ளம்
வாழிய வளம்நலம் உளம்நிறைந் தற்றே!
- தமிழகழ்வன் சுப்பிரமணி சேகர்
No comments:
Post a Comment